பழநி கழக நகரத் தலைவர் ஜோசப் அவர்கள் மறைவுற்றார். செய்தியறிந்ததும் திண்டுக்கல் மாவட்ட திராவிடர்கழக தலைவர் வீரபாண்டியன், திண்டுக்கல் நகர செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தமுனிராசன், கழக இணைச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.
- - - - -
சீரிய பகுத்தறிவாளரும் திராவிடர் கழகத் தோழருமான ஆய்ப்பாடி கணேசன் (வயது 77) நேற்று (3.10.2021) மாலை ஏழு மணியளவில் உடல் நலம் குன்றிய நிலையில் மறை வுற்றார். மயிலாடுதுறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு திராவிடர்கழக பொதுக்கூட்டங் களிலும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை அருமையாக நடத்தி மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தியவர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும் இயக்க நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்றவர்.
இன்று (4.10.2021) மாலை 3 மணியளவில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
- - - - -
ஒசூர்,பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனத்தின் நிறுவனத் தலை வரும் சிறந்த பகுத்தறிவுவாதி யுமான பொறியாளர் பெருமாள் இன்று (4-9-2021) அதிகாலை 1.30 மணிக்கு இயற்கை எய் தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவர் தஞ்சை பெரியார்-மணியம்மை (உலகில் முதல் பெண்களுக்கான) பொறியியல் கல்லூரியில் சிறிது காலம் ஆலோசகராக பணியாற்றியவர். தந்தைபெரியார் மீதும், ஆசிரியர் மீதும் பற்றுடையவர். ஆண்டுதோறும் ஒசூரில் நடைபெறும் புத்தகத் திரு விழாவில் இயக்க நூல்களை வாங்கி மாணவர்களுக்கு வழங்கிய கொடையாளர். பெரியார் 1000 நிகழ்ச்சி நடத்த பெரிதும் உதவியவர்.இவருக்கு ஒரு மகனும்,இரு மகள்க ளும் உள்ளனர். அவரின் உடல் ஒசூர் பி.எம்.சி.டெக் கல்லூரி வளாகத் தில் இன்று காலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதைக்காக வைக்கப்பட்டது.
- - - - -
திருவண்ணாமலை பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மேனாள் தலைவர் இராதாபுரத்தை சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் சீரிய பகுத்தறிவாளர் தாமோதரன் அவர்கள் இன்று (4.10.202) அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment