நான் நரேந்திர மோடி பேசுகிறேன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

நான் நரேந்திர மோடி பேசுகிறேன்

வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம் (அரசுக்கு). மீதி சம்பளத்தில் (28 சதவீதம் GST என வாங்கும் பொருளுக்கு கட்டுகிறோம். பெட்ரோல் மற்றும் பல பொருட்கள் GSTயில் சேர்க்காமல் 60 சதவீதத்திற்கும் மேல் TAX கட்டுகிறோம். மொத்தத்தில் சராசரி 50 சதவீதம் வாங்கும் பொருளுக்கும் உங்களிடமே (அரசுக்கு) தருகிறோம்.

ஆக 30+50= 80 சதவீத வருமானத்தை உங்கள் (அரசு) கஜானாவில் சேர்ந்துள்ள வர்களை பார்த்து LPG  மான்யம் வேண்டா மென்று ஞ் பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா? என கேட்பவர்கள் கவனிக்க - கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் எரிவாயு உருளை தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் - “நான் நரேந்திர மோடி பேசுகிறேன்என்று ஒரு குரல் ஆரம்பித்து (இந்தியில் தான்!).

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவிற்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே  என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்!

(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே!)

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில் பேசும்போதுஇதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின் ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும். இன்னும் அதிகம் பேர்மான்யத்தை தியாகம் செய்யமுன் வரவேண்டும்என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலா வாரியாக விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

நான் என் LPG  மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக் கிறது. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்க ளேன் என்று கேட்டிருக்கிறார்.

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில் அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும் உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்.

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர் களுக்கு...

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டுமென்று, வேலை மெனக்கெட்டு, என் போனிலேயே, என் செலவிலேயே - வேண்டி, விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.!

மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக் கொள்வேன். ஆனால் அதற்கு முன் கீழ்க் கண்ட விஷயங்கள் நடைபெற்றால் தேவலை.

நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் - இந்த நாட்டை வழி நடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும், அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா?

உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில் போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை அறிவித்திருக்கிறீர்கள்.

அதில் உள்ள பெரும் பணக்காரர்கள் அனை வரும் - தங்களுக்கு சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில் கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப் பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா?

சட்டமன்ற, நாடாளுமன்ற -  கூட்டங் களில் அநேக பிரச்சினைகளில் - எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே, அதெப்படி உங் களது சம்பளம், படி, சலுகைகளை உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும் - ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு - உடனடியாக விவாதமே இன்றி நிறைவேற்றிக் கொள்கி றீர்கள்?

கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச் சினைகளை விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை - எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள் விவா திப்பதை நாங்கள் என்று காண்பது?

வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச் செல்லும் போது பொதுமக்கள் பயன்படுத்தும் சாதா ரண ரயிலில் செல்லும்போது - கோடிக்கணக் கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான, அமைச்சர்களான, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் களான நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார் களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி?

உங்கள் சொந்த வசதி, சவுகரியங்க ளுக்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும் வரியிலிருந்து தான் எடுக்கப் படுகிறது என்பது உங்கள் நினைவிற்கு வருவதே இல்லையா?

நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் தொலைப்பேசிகளுக்காக   உபயோகப்படுத் தும் மின் வசதிகளுக்காக - குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக - இந் தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும் பயணப்படுவதற்காக - உருப்படியான வேலை எதுவும் இல்லாமல், சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக - எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரி யாகக் கொடுக்கிறோம் என்பதை என்றா வது நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

உங்கள் சொந்த சவுகரியங்களுக்காக ஆகும் இந்த செலவுகளை எல்லாம் நீங் களே ஏற்றுக் கொள்ளும் சுபதினம் என்றா வது வருமென்று குடிமக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கலாமா?

மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட, நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில் தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் தினமும் செத்துக் கொண்டி ருக்கிறார்கள் என்பதை என்றாவது நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா?

இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில் செய்துகொள்ளும் நாள் என்றாவது வருமா?

அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு Z என்றும் Z + என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் அமைச்சர்கள் திரி கிறார்கள்?

தினமும் உங்கள் கூட படாடோபத் திற்காக துணைக்கு வரும் பூனைப்படை, யானைப்படை - எல்லாவற்றிற்கும் கொடுக் கும் சம்பளப்பணம் - எங்கள் வரியிலிருந்து வருவது தானே?

இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் - உங்களை பாது காக்க நாங்கள் செலவழிக்க வேண்டியிருக் கும் இந்த பரிதாப நிலை என்று மாறும்?

சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட் டிற்கே பற்றாமல் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின் நடைபாதை களில் பட்டினியோடு படுத்துத் தூங்கும் போது - உங்களுக்கு ஏன் நாடாளுமன்ற உணவகங்களில் மலிவு விலையில் உண வுப் பொருட்கள்?

ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும், ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும், எந்த குடிமக னுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே.

பெரும் பணக்காரர்களான உங்களிடம் கொடுக்கக் காசில்லையே என்றா இந்த மலிவு விலை?

உங்களின் இந்த மலிவு விலை சோற் றுக்கு கூட - அன்றாடங் காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான் காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை என்றுமே உறுத்தவில்லையா?

நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனை யெத்தனை Income tax,

Service Tax,

Professional Tax,

Value Added Tax,

Wealth Tax,

Corporation Tax,

Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும் இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும் விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா?

உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல் செய்யப்படுகிறது?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம் கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் மரியாதைமிக்க குடிமகனாக நீங் கள் எல்லாம் மாறும் நாள் வருமா?

இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும் நிர்வாகம் செய்வதற் கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் - என்றைக்கு, உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ - அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை - நீங்கள் கோராமலேயே நாங்கள் அனை வரும் அவசியம் விட்டுக் கொடுப்போம்!

No comments:

Post a Comment