அர்ச்சகர்களின் அட்டகாசம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

அர்ச்சகர்களின் அட்டகாசம்

அய்ந்து வருடங்களுக்கு முன்பு என் மனைவியுடன் பழனி கோயில் சென்றிருந்தேன்.

மலையடிவாரத்தில் விஞ்ச் பெட்டியில் மலையேற டிக்கெட் எடுத்து வரிசையில் நின்றோம்.

காவி வேட்டி கட்டிய நெற்றியில் பட்டை குங்குமம் அணிந்த ஒருவர் அருகே வந்துநீங்க இதுல போயி சாமிதரிசனம் செய்யறதுக்குள்ள பலமணி நேரம் ஆகிடும். எனக்கு தெரிஞ்ச அய்யர் இருக்காரு அவருகிட்ட அழைச்சிட்டு போறேன். சீக்கிரம் தரிசனம் செய்யலாம்என்றார். சரி என்று சொன்னதால் அவரும் மேலே வந்தார். குறிப்பிட்ட அய்யரை போனில் வரவழைத்து அவரிடம் எங்களை விட்டார்.

அந்த அய்யர் விஅய்பி தரிசன கட்டணச்சீட்டு அல்லது விவிஅய்பி கட்டணச்சீட்டு எதுவும் வாங்காமல் அதாவது அரசுக்கு பணம் செல்லுவதைத் தடுத்து நேரடியாக குறுக்கு வழியில் வழியிலிருந்த காவலாளர்களிடம் சொல்லி கேட்டைத் திறந்து சன்னிதானத்தின் உள்ளே கருவறை முன் அமரச் சொன்னார்.

தீபஆராதனை நடந்தது. பார்த்தோம்.

திரூநீறு தந்தனர். பின்னர் மூலவர் சிலையில் இருந்த விக்கிரகம் கழுத்தில் இருந்த இரண்டு மாலைகளை எடுத்துவந்து எங்கள் கழுத்தில் போட்டனர். பிரசாதம் கொஞ்சம் தந்தனர்.

எல்லாம் முடிந்து மலையிலிருந்து கீழே வந்தவுடன் அழைத்துப்போன ஆஷாடபூதி உங்களுக்கு விவிஅய்பி தரிசனம் சாதாரணமாகத் தரப்பட்டது. மாலையெல்லாம் போட்டாங்களா ? என்றார். ஆமாம் என்றேன்.

பேனா எடுத்து ஏதோ கணக்குப் போட்டு நீங்கள் ரூபாய் 5000 தரவேண்டும் என்றார். எனக்கு கோபம் வந்துவிட்டது. ‘எதுக்கு 5000 ரூபாய் அதிகமாயிருக்கேஎன்றேன். மாலையெல்லாம் போட்டாங்களே என்றார். ‘நான் அதைக் கேட்கவே இல்லையே. யாரோ வாங்கிவந்த மாலையை சாமிக்கு அணிவித்து அதை எங்கள் கழுத்தில் போட 5000 தரணுமா? என்ன விளையாடுறீங்களா?’ என சத்தம் போட்டேன். கொஞ்சம் இறங்கிசரி 4000 ரூபாய் தந்தால் போதும்என்றார்.

உடனே நான்நானும் அரசு அதிகாரிதான் ணிளி ஆபீஸ் எங்க இருக்கு?” நான் அவரைப்பாக்கணும். இப்ப யிசி யாரு? அவரு போன்நம்பரைத் தாங்க என்றேன்?

அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் வர பக்கத்தில் சிலர் கூடிவிட்டனர். என் மனைவிஏங்க கேட்பதை கொடுத்துட்டு வாங்க ஏன் பிரச்சினைஎன்றார்.

நான் விடாப்பிடியாக கோயிலில் இப்படி பகல்கொள்ளை அடிப்பது சரியா என சத்தம்போட இன்னொரு காவி வேட்டி புரோக்கர் தனியா என்னக் கூட்டிப்போய் சார் 2000 கொடுங்க போதும்.

உங்களுக்கு மெனக்கெட்டதில் வேற யாருக்காவது செஞ்சிருந்தா சாதாரணமா 4000 ரூபா வாங்கியிருப்போம் என்றார்.

கடைசியில் ரூபாய் 1500 தந்துவிட்டு வந்தேன்.

திருச்செந்தூரில் இதுக்கென்று பல புரோக்கர்கள் உள்ளனர். அழைத்துச் சென்று வாசலில் தயாராக இருக்கும் பிராமணர் வசம் விட அவர் கறக்கும்வரை கறந்துவிடுவார். திருத்தணியிலும் இவ்வாறே.

அர்ச்சகர் எனில் அறம் வழுவாதவர்கள். பிராமணர் எனில் தவறு செய்யமாட்டார் என்பது பொய் என்பதற்கே இந்தப்பதிவு.

கட்டண தரிசனம் பெரும்பாலும் மூடியே கிடக்கும்.

மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் இதையும் கவனித்து நடவடிக்கை எடுத்தால் நன்று.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனில் கோபம் ஏன் வருகிறது என இப்போது புரியுமே?

- கோட்டூர் மு.மகேஷ்குமார்

No comments:

Post a Comment