அரியானா பா.ஜ.க. முதலமைச்சரின் வன்முறைத் தூண்டும் பேச்சு
புதுடில்லி, அக்.6 ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய 3 வேளாண் சட்டங் களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். மேலும், அச்சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக-வின் அரசியல் நடவடிக் கைகளை அனுமதிக்க மாட் டோம் என்று விவசாயிகள் போராட்டங்களை தொடர் கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 28 அன்று கர்னாலில், அரியானா பாஜக முதல மைச்சர் மனோகர் லால் கட்டார் கலந்து கொண்ட கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப் போது, அவர்கள் மீது கொடூர தடியடி ஏவிவிடப்பட்டது. ஒரு விவசாயியின் மண்டைகூட உடை யாமல் இருக்கக் கூடாது என்று கர்னால் சார் ஆட்சியர் ஆயுஷ் சின்கா உத்தரவிட்ட சம்பவம் காட்சிப்பதிவாக வெளியானது.
இந்த தாக்குதல் சம்பவத்தில், விவசாயிகள் பலர் படுகாயம் அடைந்ததுடன், சுசில் கஜால் என்ற விவசாயி இறந்தே போனார்.
இந்த அடக்குமுறைக்குப் பின் விவசாயிகள் பின்வாங்கி விடுவார்கள் என்று கணக்கு போட்டார். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்னாலில் உள்ள முதலமைச்சர் கட்டாரின் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டனர். காவல்துறையினரும் வழக்கம்போல தடியடி, தண்ணீர் பீய்ச்சியும்,ரப்பர் குண்டு கள் மூலமும் தாக்குதல் நடத்தினர்.
விவசாயிகளோ அடக்கு முறையை மிகுந்த உறுதியுடன் எதிர்கொண்டு போராட் டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, அரியானா மாநிலத்தில், அக்டோபர் 3-ஆம் தேதி முதல், விவசாயிகளிடம் இருந்து நெல் மற்றும் சிறு தானி யங்கள் கொள்முதல் செய்யப் படும் என மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.
முதலமைச்சராலேயே கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை
கட்டாரின் அறிவிப்புக்கு பாராட்டு என்ற பெயரில் பாஜக விவசாயிகள் பிரிவு ஏற்பாடு செய்த கூட்டத்தில் மனோகர் லால் கட்டார் கலந்துகொண்டு பேசிய போது, “அரியானாவின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள ஒவ்வொரு மாவட் டங்களிலும் 700 முதல் 1000 விவசாயிகளைக் கொண்ட ‘தன்னார்வலர்’ குழுக்களை பாஜக விவசாயிகள் பிரிவினர் ஏற்படுத்த வேண்டும். அந்த குழுக்களை, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு எதிராக பழிக்குப்பழி வாங்கும் (tit for tat) நடவடிக்கையில் பயன்படுத்த வேண்டும். இதற்காக கட்டை களை கையில் எடுங்கள் (pick up sticks). சிறை செல்வது குறித்தும் பிணை பற்றியும் கவலைப்பட வேண் டாம். அதை நாங்கள் (அரி யானா பாஜக அரசு) பார்த்துக் கொள்வோம். நீங்கள் ஒரு மாதம், இரண்டு மாதங் கள் அல்லது ஆறு மாதங்கள் சிறை யில் இருக்க நேர்ந்தால் கூட, பின்னாளில் நீங்கள் ஒரு பெரிய தலைவராகி விடலாம்’’ என்று பகிரங்கமாக அவர் பேச்சின் மூலம் வன்முறையைத் தூண்டி யுள்ளார்.
அவர் பேசியது தொடர்பான காட்சிப்பதிவு ஆதாரமும் வெளி யாகி உள்ளது. இது புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முதலமைச்சரே வன்முறை யைத் தூண்டி விடுவதா? என்று கட் டாரின் இந்தப் பேச்சுக்கு கண்ட னங்கள் எழுந்துள்ளன.
காங்கிரசு கடுங்கண்டனம்
“போராட்டம் நடத்தும் விவ சாயிகளை தடியால் தாக்கவும், சிறைக்கு செல்லவும், பின்னர் அவர்களை தலைவர்கள் ஆக் கவும் பிஜேபி ஆதரவாளர்களைத் தூண்டும் கட்டாரின் குரு மந்திரம், அரசமைப் பின்படி உறுதி மொழி எடுத்து ஒரு பொது நிகழ்ச்சியில் அராஜ கத்தை பரப்புவதற்கான கட்டாரின் இந்த அழைப்பு ஒரு தேசத் துரோகம் ஆகும்” என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.
No comments:
Post a Comment