வளைந்து கொடுக்கும் சூரிய மின் தகடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

வளைந்து கொடுக்கும் சூரிய மின் தகடு!

சூரிய ஒளி மின் தகடுகளுக்குப் போட்டியாக, வளைந்துகொடுக்கும் தகடுகள் வநதன. ஆனால், அவற்றின் மின் உற்பத்தி ஆற்றல் போதாது என்ற குறை இருந்தது. அண்மையில், சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் இத்துறையில் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் வடிவமைத்துள்ள வளையும் தகடு மீது படும் சூரிய ஒளியில், 21.4 சதவீதத்தை மின்சாரமாக மாற்றும் திறன் கொண்டது. சுவிட்சர்லாந்தின், 'எம்பா' ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், சி.அய்.ஜி.எஸ்., எனப்படும் செம்பு, இண்டியம், காலியம் மற்றும் செலினியம் ஆகியவற்றால் ஆன படலத்தை உருவாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் போல வளையும் இந்தப் படலத்தின் மீது சூரிய ஒளி பட்டால், சிலிக்கன் தகடில் கிடைக்கும் அளவு மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

பல ஆண்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்றாலும், எம்பா விஞ்ஞானிகள் மேலும் மின் உற்பத்தியை அதிகரிக்க ஆராய்ந்து வருகின்றனர். எடை குறைவாகவும், அதிக இடம் பிடிக்காமலும் இருப்பதால், சி.அய்.ஜி.எஸ்., படலத்தை, மின்சாரத்தில் பறக்கும் விமானம் மற்றும் வாகனங்களின் மேற்பரப்பில் ஒட்டிவிடலாம். ஏன், மொபைல் மற்றும் மடிக்கணினிகளின் வெளிப்பகுதியில் ஒட்டினால், தொடர்ந்து மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறலாம்.


No comments:

Post a Comment