டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஓர் ஆண்டுகளாக டில்லி அருகே போராடும் விவசாய அமைப்புகளின் கோரிக்கை குறித்து ஒரு முடிவும் எடுக்காமல், எவ்வளவு நாட்கள் போராடுவீர்கள் என நீதிமன்றம் கேட்பது நியாயம் அல்ல என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் கொல்லப்பட்ட ஜாக்கியா கான் ஜாப்ரி வழக்கில் பிரதமர் மோடி நிரபராதி என்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை அக்டோபர் 26-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஹிந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்தி அதிகாரத்தை ருசிக்கும் பா.ஜ.க.வை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் தோற்கடிக்க முடியும் என லாலு பிரசாத் கருத்து.
· பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் கைப்பாவை; அனைத்து அதிகார மய்யங்களிலும் ஆர்.எஸ்.எஸ். தனது ஆட்களை நியமித்துள்ளது என மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்த தரவுகளை எங்களுக்குக் காட்டுங்கள் என உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவு.
· இந்தியாவில் 1 லட்சம் பள்ளிகள் தலா 1 ஆசிரியருடன் இயங்குகின்றன என யுனெஸ்கோ அறிக்கை.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment