ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· கேரளாவில் பயிற்சி பெற்ற 22 பெண் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்ய தயாராக உள்ளனர். மூவாட்டுப்புழாவுக்கு அருகிலுள்ள பெரமங்கலம்நாகராஜ க்ஷேத்திரத்தில்கே.வி.சுபாஷ் தந்திரியிடம்தீக்ஷா’ (மாணவர் அர்ச்சகர் கடமைகளைச் செய்யலாம் என்று ஆசிரியரின் ஆசீர்வாதம்) பெற்றனர்.

· 2008ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவ காரணங்களுக்காக பிணையில் வெளிவந்த பாஜக தலைவரும், போபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரக்யா தாக்கூர், கபாடி விளையாடுவது காணொலியில் வெளியாகியுள்ளது.

தி டெலிகிராப்:

இந்திய கல்வி நிலை அறிக்கை (2021)-இன்படி, மொத்தம்  19 சதவீதம் அல்லது 11.16 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 69 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ளன. இந்தியாவில் 1.1 லட்சம் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· தமிழ்நாடு ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறை இந்த ஆண்டு போஸ்ட் மெட்ரிகுலேஷன் ஸ்காலர்ஷிப் (பிஎம்எஸ்) திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2017 முதல் குறைக்கப்பட்டு இந்த ஆண்டு ரூ .48 கோடியாக குறைத்துள்ளது..

 - குடந்தை கருணா


No comments:

Post a Comment