சென்னை , அக், 29 தமிழ்நாட்டில் 'நீட்' தேர் வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று டில்லியில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவை சந்தித்து அமைச் சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார். கரோனா தடுப்பூசி, மாநில மருத்துவ கட்ட மைப்பு குறித்து அனைத்து மாநில சுகா தாரத் துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டில்லியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், மருத்துவக்கல்வி இயக் குநர் டாக்டர் நாராயணபாபு ஆகி யோரும் சென்றிருந்தனர்,
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்ததோடு, அதை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டார். கூட்டம் முடிந்த பிறகு இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறியதாவது:
இந்தக் கூட்டத்தில், நவம்பர் இறுதிக்குள் இந்தியாவில் முழுமை யாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திடும் பணி களை முடித்திட வேண்டும் என்பது குறித்தும், 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு யார் யாருக்கு தடுப் பூசிகள் போட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல்அமைச்சரின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாட்டில் நிறைவேற்ற ப்பட வேண்டிய 11 கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அமைச்சரோடு விவாதிக்கப்பட்டு, அவரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், 11 மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை குறித்தும், ஏற்கெனவே 850 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்த நிலையில், மீதமுள்ள 800 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கவும் வலியுறுத்தப்பட்டு உள் ளது. முழுமையான இடங்களுக்கும் சேர்க்கைக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும், கோவையில் புதிகாக எய்ம்ஸ் மருத் துவமனை அமைத்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது. மேலும் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ள து. |
2-ஆவது தவணை கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு 12 லட்சம் பேர் காத்திருப்பதை கருத்தில் கொண்டு, குறைந்தது
10 லட்சம் தடுப்பூசிகளையாவது விரைந்து வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பற்றி மருத்துவ வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். அதில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு குறித்து கேட்டுள்ளோம். தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாட்டில் 19 மாவட்ட அரசு மருத்துவமனை களுக்கு அனுமதியும், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தலா ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு என்ற வகையில் ரூ.950 கோடி நிதி ஒதுக்குவது குறித்தும் கேட்டுள்ளோம்.
மேலும் செங்கல்பட்டில் உள்ள எச்.எல், எல், பயோ டெக் நிறுவனத் தையும், குன்னூரில் இருக்கிற பாஸ்டியர் நிறுவனத்தையும் உடன டியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தமிழ் நாட்டின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment