2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் குறைந்தது உத்தரப் பிதேசம், உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பது பாஜ.கட்சிக்கு மிகமிக முக்கியமான நோக்கமாக அமைந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியிலோ மிகுந்த குழப்பம் நிலவி வருகிறது.
தேர்தல் போட்டியின் இயல்பான தன்மை
கோவிட்-19 நோய்த் தொற்றின் இரண்டாவது அலை வரிசை தாக்குதலில் பல்லாயிரக் கணக்கான பொது மக்களின் உயிரிழப்புக்கு பா.ஜ.க. அரசின் மீது மிகப் பெரியதொரு அளவில் குற்றம் சாட்டப்பட்ட தற்குப் பிறகு, நடைபெற இருக்கும் முதல் சட்ட மன்றத் தேர்தல்கள் இவை. நாடெங்கிலும் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டங்களும், அண்மையில் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சரின் மகன் நான்கு விவசாயிகள் மீது வாகனத்தை ஒட்டிக் கொன்ற அண்மைக் கால நிகழ்வும் பா.ஜ. கட்சிக்கு மேலும் மேலும் தொல்லை களை சேர்த்து உள்ளதாகவே தோன்றுகிறது. இந்தக் காரணங்களால் மட்டுமே வர இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வி அடையும் என்று எவராவது நம்புவாரேயானால், அவர் மாபெரும் தவறை செய்தவராக ஆவார்.
இந்த 4 மாநிலங்களிலும் 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்லின்போது இருந்தது போன்ற செல்வாக்கு இப்போது பா.ஜ.கட்சிக்கு இல்லாமல் போனாலும், இத்தேர்தல்களின் இயல்பான தன்மை பா.ஜ.கட்சிக்கு ஆதாயம் தருவதாகவே இருக்கிறது. இந்த மாநிலங்களின் தேர்தல்களில் பா.ஜ.கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போகும் அளவுக்கு பல் முனைப் போட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. இந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் ஓரளவு வாக்குகளைப் பெறுவதற்கு இயலும் என்பதால், காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகளை இவற்றினால் சீரழித்து விடுவதற்கும் இயலும். பா.ஜ.கட்சி பெற இயன்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இம் மாநிலங்களில் தங்களது ஆட்சியை பா.ஜ.க. தக்க வைத்துக் கொள்வதற்கு அதுவே போதுமானதாக இருக்கும். எனவே, பா.ஜ.கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போவதை குறைப்பதற்காக எதிர்கட்சிகள் ஒரு கூட்டணி அமைத்துப் போட்டி யிடவேண்டும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.கட்சியின் ஆதிக்கம்
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது வாக னத்தை ஏற்றிக் கொன்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ள கண்டன மும், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெண் களுக்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்து விடும் என்று நினைப்பவர்களின் எண்ணம் தவறானதே ஆகும். அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சி இந்த மாநில தேர்தல்களில் பரிதாபப் பட இயன்ற வகையில் மிகமிக மோசமாக தோல்வி அடைந்து வந்திருப்பதால், வெறும் போராட்டங் களாலும், அறிவிப்புகளாலும் மட்டுமே இம்மாநிலத்தில் இழந்திருக்கும் செல்வாக்கைக் காங்கிரஸ் கட்சியால் மீட்டெடுத்துவிட முடியாது. 40 சதவிகித பெண் களுக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு அளிப்பதாக அறிவித்திருப்பது ஒரு துணிவு நிறைந்த முடிவே ஆகும். ஆனால், அதன் மூலம் பெண்களின் ஆதர வைத் திரட்டுவதற்கு போதிய கால அவகாசமோ, தகுந்த வாய்ப்புகளோ இல்லை என்பதால், தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்திக் கொள்வதற்கு காங் கிரஸ் கட்சியால் இயலாது என்பதால், கூட்டணி அமைக் காமல் காங்கிரஸ் கட்சி தனியாக தேர்தலில் போட்டியிடு மானால், பா.ஜ. கட்சிக்கு சவால் அளிக்கும் இடத்தை காங்கிரஸ் கட்சியால் நெருங்கக் கூட முடியாது.
பா.ஜ.கட்சிக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிடாமல் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி யிட்டுக் கொண்டிருந்தால், பா.ஜ.கட்சிக்கு எந்தவித சவால்களையும் அளிக்க அவற்றால் இயலாமற் போகும். இந்த இரு கட்சிகளும் தலா 20 சதவிகித வாக்குகளைப் பெற இயன்ற நிலையில் உள்ளவை ஆகும். சமாஜ்வாடி கட்சியின் முக்கிய ஆதர வாளர்கள் யாதவர்களாகவும், பகுஜன் சமாஜ் கட்சி யின் ஆதரவாளர்களாக தாழ்த்தப்பட்டவர்கள், குறிப் பாக ஜாதவ்களும் இருக்கின்றனர். முஸ்லிம் சமூக மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு இந்த இரு கட்சிகளுமே தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டி ருக்கின்றன. இதனால் முஸ்லிம் சமூக மக்களின் வாக்குகள் பிளவுபடும் நிலையில், சமாஜ்வாடி கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ. கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போகாமல் இருப்பதற்கு குறைந்தது இந்த இரு கட்சிகளும் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும். இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் ராஷ்டிரிய லோக் தளக் கட்சியும் சேர்க்கப்பட வேண்டும். எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்ப்பதால் மட்டுமே பா.ஜ.கட்சியை 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தோற் கடிக்க முடியும். சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக் தளக் கட்சி கூட்டணியினால் மட்டுமே பா.ஜ.க.வைத் தோற்கடிக்க முடியாது.
2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் 39 . 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.கட்சியைத் தோற்கடிப்பதற்கு இன்னமும் 7 . 8 சதவிகித வாக்குகள் பா.ஜ.க.விடமிருந்து கைப்பற்றப் பட வேண்டும். மிகப் பெரிய எதிர்க் கட்சியால்தான் இதனைச் செய்ய இயலும். 2017ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின்போது முக்கிய எதிர்க் கட்சியாக விளங்கிய சமாஜ்வாடி கட்சியால், தானே தனியாக பா.ஜ.கட்சியிடமிருந்து 8 . 9 சதவிகித வாக்குகளைக் கைப்பற்றும் இச்செயலை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒன்றுபட்ட எதிர்க் கட்சிகளின் கூட்டணி ஒன்றினால்தான் இதனை சாதிக்க இயலும்.
உத்தராகண்ட் மாநில 2017 சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய அளவிலான பெரும்பான்மையை பா.ஜ. கட்சி பெற்றிருந்த போதிலும், ஆட்சி நிலைத்தன்மை பெற்றதாக இருக்கவில்லை. அத்தேர்தலுக்குப் பிறகு இக்கட்சி இம்மாநிலத்தில் மூன்று முதலமைச்சர்களைப் பார்த்துள்ளது. இம்மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஜம் பா.ஜ.கட்சியும் நேருக்கு நேராகப் போட்டியிட்டால், பா.ஜ.கட்சியைத் தோற்கடிப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியும் இம்மாநிலத் தேர்தலில் போட்டியிட இருப்பதால், தன்னந்தனியாக பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி கொள்ள காங்கிரஸ் கட்சியால் இயலாது. இத்தேர்தலில் தன்னந்தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு ஆம் ஆத்மி கட்சியால் இயலாது என்ற போதிலும், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பைக் கெடுக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெறுவதற்கு அதனால் முடியும் என்ப தால், அது பா.ஜ.கட்சிக்கு சாதகமாகவே அமையும்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கோவா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் அது பல்முனைப் போட்டியை ஏற்படுத்தி விடும். பிளவு பட்ட எதிர்க் கட்சிகள் மறுபடியும் பா.ஜ. கட்சிக்கு ஆதாயம் அளிப்பதாகவே அது முடியும். மேலும் இன்று உள்ள கோவா காங்கிரஸ் 2017 ஆம் ஆண்டில் இருந்த காங்கிரஸ் கட்சி அல்ல. அதிலிருந்து பல தலைவர்கள் வெளியேறி பல்வேறுபட்ட கட்சிகளில், முக்கியமாக பா.ஜ.கட்சியில் இணைந்து விட்டனர்.
மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலுக்காகத் தேர் தலுக்கு முன்போ அல்லது பின்போ பா.ஜ.க. நிர் வாகிகள் எவ்வாறு ஒரு கூட்டணியை ஏற்படுத்தப் போகின்றனர் என்பதைப் பொறுத்துதான் தேர்தல் வெற்றி தோல்விகள் அமையும். பல மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகு, குறைந்த அளவு சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும், ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. முன்னிலை பெற்றதாக இருந்து வந்துள்ளது.
வரலாற்றிலிருந்து கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்
இந்தியாவில் ஒரு அரசியல் கட்சி மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் பெற்றதாக அமையும்போது, ஒன்றுபட்ட எதிர்க் கட்சிகளால்தான், தேர்தலுக்கு முந்தைய அல்லது பிந்தைய கூட்டணிகளின் மூலம் ஆளுங்கட்சிகள் எதிர்க்கப்பட்டு வந்துள்ளன. 1977 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது, காங்கிரஸ் கட்சிக்கு பின்ன டைவு ஏற்பட்டது. 1988 மற்றும் 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரசை பா.ஜ.க. எதிர்த்த போது, பல்வேறுபட்ட பிராந்திய கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்ட பா.ஜ. கட்சி அந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை 2004 மற்றும் 2009 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எதிர்த்தபோது, காங்கிரஸ் கட்சியும் பல பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டு இத்தேர்தல்களில் வெற்றி பெற்றது. எனவே, இன்று மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.கட்சியை எதிர்ப்பதற்கு ஒரு ஒன்றுபட்ட எதிர்க் கட்சி கூட்டணியால் மட்டுமே முடியும். தற்போது நிலவும் இந்திய மக்களின் அரசியல் உணர்ச் சியிலும், சூழ்நிலையிலும் தேர்தல் போட்டியில், வேறு எது ஒன்றினாலும் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டு பின்னுக்குத் தள்ளப்பட இயலாது.
நன்றி: 'தி இந்து' 25-10-2021
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment