சமூகநீதி என்பது வெறும் ஏட்டுச்சொல் அல்ல, செயல்வடிவம் பெற்று நம்மை இயக்கிக் கொண்டி ருக்கும் உயிர்த்துடிப்பு என்று சமூக நீதிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு தளபதி அவர்கள்.
அறிஞர் அண்ணா அவர்களின் 'சுயமரியாதை திருமண சட்டம்,' முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 'பெரியார் சமத்துவபுரம் 'வரிசையில் தளபதி அவர்களின் 'சமூகநீதி கண்காணிப்பு குழு' என்பது வரலாற்றில் பொன்னெழுத் துக்களால் போற்றப்படும் என்பதில் அய்யமில்லை.
சமூகநீதியின் பிறப்பிடம், இருப் பிடம், வாழ்விடம் தமிழ்நாடு என்பது மாண்புமிகு தளபதி அவர்களால் மேலும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு சமூகநீதி தான் இருவிழி, அந்தவிழியால் ஒளி எனும்நல்வழிதான் அமையும் என செயலில் காட்டியுள்ளார் மாண்புமிகு தளபதி அவர்கள்.
இந்திய அரசமைப்பு சட்டத்தை முதலில்திருத்தசெய்தவர் தந்தை பெரியார். அரசமைப்பு சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு வழிகாட்டியது தமிழ்நாடு என்ற வரிசையில் மாண்புமிகு தளபதி அவர்களின் 'சமூகநீதி கண்காணிப்பு குழு' இன்று இந்தியாவிற்கே வழி காட்டியுள்ளது.
சமூகநீதி என்பது வெற்றுச் சொல் அல்ல, இயங்கிக் கொண்டிருக்கும் கடிகாரம். அதன்படி நாம் செயல்பட வேண்டும் என்று கடிகாரம் போல இயங்கி செயலில் வென்றுள்ளார் தளபதி அவர்கள்.
கடிகாரம் எதற்காகவும் தன்னை மெய்ப்பித்துக் கொள்வதில்லை சரியாக இயங்குகிறேன் என்று, அது போல தளபதி அவர்கள் தமக்கான பெருமை என கருதாமல், மக்க ளுக்கான, நாட்டிற்கான சேவை என செயலாற்றி வருகிறார்.
"சமூகநீதி கண்காணிப்பு குழு" அமைக்கப்பட்ட ஆணை வந்த வுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை யும், பாராட்டி அறிக்கை வெளியிட்ட தையும், வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை .
சமூகநீதி என்றும் தழைத்தோங்க உயர்த்திப் பிடிப்போம். என்றும் வெல்லட்டும் சமூகநீதி.
- மு. சு. அன்புமணி, மதுரை
No comments:
Post a Comment