கோவை, அக்.13 கோவை குருடம் பாளையம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, சுயேச் சையாகப் போட்டியிட்ட பாஜக நிர்வாகி, ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.
கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது குருடம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 9ஆவது வார்டு உறுப்பினர் பதவி சமீபத்தில் காலியானது. இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக் காளர்கள் உள்ளனர். காலியாக உள்ள 9ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்குத் தகுந்த நபரை தேர்வு செய்ய, கடந்த 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
இத்தேர்தலில் சுயேச்சை வேட் பாளர்களாக திறவுகோல் சின்னத் தில் ந.கந்தேஷ், சீப்பு சின்னத்தில் செ.ஜெயராசு, கட்டில் சின்னத்தில் ஆ.அருள்ராஜ், கார் சின்னத்தில் தீ.கார்த்திக், சங்கு சின்னத்தில் ப.வைத்தியலிங்கம், பெயின்ட் பிரஷ் சின்னத்தில் ப.ரவிக்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்ட னர். மொத்தமுள்ள வாக்காளர் களில் 913 பேர் தங்களது வாக்கு களை செலுத்தினர். வாக்குப்பதிவு முடிந்தவுடன், ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எடுத்துச் சென்று வைக்கப்பட்டன.
நேற்று (12ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப் பினர் பதவிக்குப் போட்டியிட்ட வர்களின் வாக்குகள் எண்ணப்பட் டன. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் 4-க்கும் மேற்பட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு இருந் தன. ஒவ்வொரு மேஜையிலும் சிறிய சிறிய பெட்டிகள் சின்னங் களுடன் வைக்கப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணும் பணியில் ஈடு பட்டிருந்த ஊழியர்கள், ஒவ்வொரு ஓட்டுச் சீட்டுகளையும் பிரித்து, முகவர்கள், வேட்பாளர்களின் முன்னிலையில் காட்டிவிட்டு, அங்கே வைக்கப்பட்டிருந்த வேட் பாளர்களுக்குரிய பிரத்யேகப் பெட்டியில் போட்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு மதியம் 2 மணிக்கு இந்த வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை பணி நிறைவடைந்தது.
இதில் ஆ.அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று 9ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக செ.ஜெயராசு 240 வாக்குகளும், ப.வைத்தியலிங்கம் 196 வாக்குகளும், ந.கந்தேஷ் 84 வாக்குகளும், ப.ரவிக்குமார் 2 வாக்குகளும், தீ.கார்த்திக் ஒரு வாக்கும் பெற்றுள்ளனர். இதில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஆ.அருள்ராஜ் திமுகவைச் சேர்ந்தவர் ஆவார்.
ஒரு வாக்கு பெற்ற தீ.கார்த்திக், கோவை பாஜக இளைஞரணியின் மாவட்ட துணைத் தலைவர் ஆவார். பாஜகவைச் சேர்ந்தவர், சுயேச்சையாகப் போட்டியிட்டு ஒரு வாக்கு பெற்ற தீ.கார்த்திக்கின் தேர்தல் முடிவு விவரங்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகின.
No comments:
Post a Comment