ஒன்றிய அரசின் அலட்சியம்தான் உ.பி. மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதே தீர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

ஒன்றிய அரசின் அலட்சியம்தான் உ.பி. மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதே தீர்வு

சென்னை,அக்.6- மூன்று வேளாண் சட்டங்களை முழுமை யாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என திமுக தலைவர் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவதுஉத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். அதனை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.

இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்!

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment