கொரட்டூர்: பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை சார்பில் சமூக நீதி நாள் கல்வெட்டுத் திறப்பு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

கொரட்டூர்: பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை சார்பில் சமூக நீதி நாள் கல்வெட்டுத் திறப்பு விழா!

சேலம், அக்.11  தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் மாநகர செயலாளர் பா.வைரம் அவர்களது தலைமையில் தாதகாபட்டி  வீரமணி டிரேடர்ஸ் முன் தந்தை பெரியார் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை  செயலாளர் பா.வெற்றிச்செல்வன், வீ.பிரபாகரன், பாலு, கருணாகரன்.ஜெ, மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் காவியா மற்றும் வீரமணி டிரேடர்ஸ் பணி யாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் அவர்களது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி சமூகநீதி நாள் உறுதிமொழியை அணைத்து தோழர் களும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மண்டல தலை வர் சி.சுப்ரமணியன், மாவட்ட தலைவர் கே.ஜவகர், செயலாளர் ..இளவழகன், துணை  செயலாளர் பா.வெற்றிச்செல்வன், மாநகர செயலாளர் பா.வைரம், மேட்டூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஓமலூர் ஒன்றிய செயலாளர் .சவுந்திரராஜன் மற்றும் பல தோழர்கள் பெரியார் பற்றாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தாம்பரம்

17.9.2021 அன்று காலை தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் முத்தையன் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலை பாரதி திடலில் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் மற்றும் உறுதிமொழி எடுத்து புகழ் முழக்கமிட்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தோர்:

மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,ஊரப்பாக்கம் உத்திரகுமாரன், நகர தலைவர் சீ.லட்சுமிபதி, நகர செயலாளர்

சு மோகன்ராஜ்,நகர துணை செயலாளர் மா.குணசேகரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள்  துரை.மணிவண்ணன், மாநில இளை ஞரணி துணை செயலாளர், வி.சீ.இராஜாமுகம்மது, நகர செயலாளர்,பேராசிரியர் தும்மா பிரான்சிஸ்,மாவட்ட இலக்கிய அணி தலைவர்,இரா.அன்பு நகர துணைச் செயலாளர்,வைகோ சுந்தரம்,மாவட்ட பிரதிநிதி, கே.வி.எஸ்.சுகுமார் வட்ட செயலாளர், மேலும் சிந்தனைக் கூடத் தோழர்கள் பேராசிரியர் அண்ணா துரை,பேராசிரியர் பாரிவள்ளல், சீனிவாசன்,உதவி இயக்குநர் முரளி, தோழர் சின்னா, தோழர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பொன்னமராவதி

 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் விழா சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்விற்கு திராவிடர்கழக மாவட்டச்செயலாளர் வீரப் பன் தலைமை வகித்தார்.  ஒன்றியப் பெருந்தலைவர், தி.மு. ஒன்றியச் செயலாளர்  அடைக்கலமணி மாலையணிவித்து மரியாதை செய்து சிறப்பித்தார். மாணவர் கழகத்தோழர் மதுபாலா, திராவிடர்கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர் சரவணன், கழக மாநில இளைஞரணிதுணைச் செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட இளைஞரணி ஆறுமுகம். ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆறுமுகம், வீ.மாவலி, மனோகரன், பவித்ரா  திமுக சார்பாக சிக்கந்தர், முரளிசுப்பையா, காங்கிரஸ் சார்பாக பொறியாளர் பழனியப்பன், வட்டாரத்தலைவர் கிரீதரன், சி.பி.அய் நிர்வாகி தோழர் பிரதாப்சிங், விசிக நிர்வாகிகள் சுடர்வளவன், சின்னுபழகு, சேது ராமன், மலைதேவேந்திரன், மே.17 இயக்கம் நிர்வாகி அய்தர்அலி, தொமுச ஆட்டோ தொழிற்சங்கத்தின் நிர்வாகி அப்பாஸ், பன்னீர் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று தந்தை பெரியார் படத்திற்கு மாலையணிவித்து, சமூகநீதிநாள் உறுதிமொழியேற்றுச் சிறப்பித்தனர்.

இதேபோல் பட்டமரத்தான் நகர் மற்றும் இராங்கியத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கும்,மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதி மொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment