கொரட்டூர்: பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை சார்பில் சமூக நீதி நாள் கல்வெட்டுத் திறப்பு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

கொரட்டூர்: பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை சார்பில் சமூக நீதி நாள் கல்வெட்டுத் திறப்பு விழா!

கல்வெட்டைத் திறந்து வைத்து துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை!

சென்னை. அக்.11 ஆவடி கொரட்டூரில் தி.மு.. சார்பில் அமைந்துள்ள பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை அமைப்பின் சமூக நீதி நாள் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார்.

சமூகநீதிநாள் கல்வெட்டு திறப்பு!

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முத்து

வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை முன் னிட்டு, ஆவடி மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதி பிரிட்டானியா பேருந்து நிறுத்தம் அருகில் நிறுவப்பட்டிருக்கும் திராவிடர் கழகக் கொடியின் பீடத்தில், சமூக நீதி நாள் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. கொரட்டூர் பகுதியில் தி.மு.. சார்பில் அமைந்துள்ள பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சீரிய பகுத்தறிவாளருமான இரா.கோபால் முன்னெடுப்பில் 09.10.2021, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப் பாளராக வருகைதர ஒப்புக்கொண்ட கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திட்டமிட்டபடியே வந்தி ருந்து, சமூகநீதி நாள் கல்வெட்டை திறந்து வைத்ததோடு. தி.., தி.மு.. தோழர்கள் மற்றும் கழகத் தோழர்களின் பலத்த முழக்கங்களிடையே கழகக் கொடியையும் ஏற்றி வைத்தார்.

கற்போம் பெரியாரியம்புத்தக அறிமுகம்!

ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள், கொரட் டூரில் உள்ள அதே பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதியகற்போம் பெரியாரியம்நூல் அறிமுக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட புத்தகத்தை,  தி.மு..பகுதி பிரதிநிதி .சங்கர், சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால் -ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென் னரசு, ஆவடி நகரத்தலைவர் கோ.முருகன், இரணியன் () அருள்தாஸ், அம்பத்தூர் ராமலிங்கம், பெரியார் பெருந் தொண்டர் ராஜேந்திரன், மற்றும் தி.மு.. தோழர்கள், கழகத் தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்களிடமிருந்து உரிய தொகை கொடுத்து பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, பெரியார் பிஞ்சுகளுக்கு தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள் புத்தகத்தை துணைத்தலைவர் வழங்கி மகிழ்ந்தார். பட்டாபிராமில் அரசுப்பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஆவடி கழக மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமையில் சிறப்பாக ஒருங்கிணைத்ததைப் பாராட்டும் வண்ணம் துணைத் தலைவர், பட்டாபிராம் பெரியார் பெருந்தொண்டர் வேல்முருகனுக்கு விடுதலை மலர் வழங்கி பாராட்டினார்.

முன்னதாக பாசறையின் ஒருங்கிணைப்பாளர் 283 ஆம் வாரக் கூட்டத்தினை சிறப்பிக்க வந்திருந்த அனைவரையும் உணர்வுபூர்வமாக வரவேற்று உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் பா. தென்னரசு, அமைப்புச் செயலாளர் வீ.பன்னீர்செல்வம், தி.மு.. பகுதிப்பிரதிநிதி .சங்கர் ஆகியோர் கோபால் அவர்களின் கொள்கைப் பிரச்சாரத்தின் தளராத முயற்சியைப் பாராட்டிப் பேசினர்.

திராவிடர் இயக்கத்தின் வரலாறே

தன்னம்பிக்கைக்கான வரலாறுதான்!

கவிஞர் தனது சிறப்புரையில், கொள்கைப் பிரச்சாரத்தில் தனக்கிருக்கும் சில தடைகள் குறித்து, பாசறையின் ஒருங் கிணைப்பாளர் இரா. கோபால் குறைப்பட்டுப் பேசியதை சுட்டிக்காட்டி, தன்னம்பிக்கை இழக்கக் கூடாது என்பதற்கு  உதாரணமாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் வாழ்க்கையில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களையே சுட்டிக்காட்டி, அது எப்படி யெல்லாம் அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத் துப் போட்டிருக்கக் கூடும் என்றும். ஆனால், நமக்கு வாய்த்த தலைவர்கள் அதிலிருந்து மீண்டதோடு,  இலக்கை அடை வதில் வெற்றியும் பெற்றதையும், அந்த வெற்றிதான் இப்போது தங்களின் இந்த நிலைக்குக் காரணமாகவும் இருந்ததை சுட்டிக்காட்டினார்.

ஆகவே இதை எண்ணிப் பார்த்து தளராமல் பிரச்சாரப் பணியைத் தொடரவும், அதற்கு திராவிடர் கழகத்தின் ஆதரவு என்றும் அவருக்கு உண்டு என்றும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். துணைத்தலைவரின் உரையென்பது நின்று பேசாமல், அமர்ந்துகொண்டு பேசிய தால், தோழர்களுக்கு குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் அமர்ந்து பாடம் கேட்ட இனிய அனுபவத்தைக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தக அறிமுகத்திற்கு முன்னதாக, சமூக நீதி நாள் கல்வெட்டு திறந்ததின் மகிழ்வாக தி.மு.. பகுதிப்பிரதிநிதி .சங்கர் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்து, மகிழ்வித்தார். மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொடுக்க, செயலாளர் .இளவரசன் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

கலந்துகொண்ட தோழர்கள்!

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் பா.முத்தழகு, துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன், நகரத்தலைவர் கோ.முருகன், பூவை பகுதித் தலைவர் பெரியார் மாணாக்கன்,

செ.பெ.தொண்டறம், பட்டாளம் பன்னீர் செல்வம், இரா. கலைவேந்தன், கூடுவாஞ்சேரி ராஜூ, .கலைமணி, வை.கலையரசன், மாணவர் கழக மண்டலச் செயலாளர் ..வேலவன், பார்த்திபன், முத்துக்குமாரசாமி, முகப்பேர் முரளி, ஆவடி நகரச் செயலாளர் .தமிழ்மணி, வஜ்ரவேல், அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ.இராமலிங்கம், அம்பத்தூர் சரவணன், கண்ணன், கொரட்டூர் பன்னீர்செல்வம், தி.மு.. பகுதிப்பிரதிநிதி .சங்கர், அமரன், விமலன், அபுதாகிர், மீரான், சூரிய தாசன், பூம்பொழில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment