சென்னை,அக்.29- இலங்கை அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று (28.10.2021) கூறியதாவது:
30, 31ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிககனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி,திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
No comments:
Post a Comment