செந்துறையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் - நூல்கள் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

செந்துறையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் - நூல்கள் வெளியீட்டு விழா

கழகத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென

அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

செந்துறை, அக்.15 அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 9.10. 2021 சனிக் கிழமை பகல் 2 மணியளவில் செந் துறை அருணா பார்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழக பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் வரவேற்றார்.

வழக்குரைஞர் ராஜா கடவுள் மறுப்பு கூறினார்.

மண்டலத் தலைவர் இரா. கோவிந்தராஜன் மண்டல செய லாளர் சு. மணிவண்ணன், மாவட்ட செயலாளர் .சிந்தனைச் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சி.காம ராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

கழக பொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமார் கூட்டத்தின் நோக்கங் களை விளக்கி தொடக்க உரை யாற்றினார்.

தமிழர் தலைவர் பங்கேற்கும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் ஆர்.எஸ்.எஸ். ஒரு ட்ரோஜன் குதிரை- கற்போம் பெரியாரியம் நூல்கள் வெளியீட்டு விழா ஆகியவற்றை செந்துறையில் சிறப்பாக நடத்துவது குறித்து கழக பொறுப்பாளர்கள் மற்றும் மாநில .. தலைவர் மா.அழகிரிசாமி உள் ளிட்டோர் கருத்துகளை எடுத்துக் கூறிய பின் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், நீட்எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத் தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் நீட்டினால் ஏற்படும் கேடுகள் குறித்தும் வெளியிடப்பட இருக்கும் நூல்களின் சிறப்புகள் குறித்தும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வலியுறுத்தியும் சிறப்புரை யாற்றினார்.

மாவட்ட ..தலைவர் தங்க சிவமூர்த்தி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர்  ராஜகிரி தங்கராசு அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்று சிறப்பாக கொண்டாட வகை செய்த "சமூக நீதிக்கான சரித்திர நாயகர் "தமிழ்நாடு முதலமைச்சர்  மு..ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் மிகுந்த நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

எதிர்வரும் அக்டோபர் இரு பத்தி ஒன்றாம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. நீட் எதிர்ப்பு கருத்தரங்கம், நூல் கள் வெளியீட்டு விழா ஆகியவற்றை சிறப்பாக நடத் துவதென முடிவு செய்யப்படுகிறது.

'ஆர்.எஸ்.எஸ். ஒரு ட்ரோஜன் குதிரை', 'கற்போம் பெரியாரியல்' ஆகிய நூல்களை பெருமளவு பரப்புவது என தீர்மானிக்கப்படுகிறது

புதிய பொறுப்பாளர்:

மாவட்ட மகளிர் பாசறை அமைப் பாளர்: ராதிகா செந்தில் குமார்.

பங்கேற்றோர்: மாவட்ட துணைத் தலைவர் இரா திலீபன், மாவட்ட அமைப் பாளர் ரத்தின.ராமச்சந்திரன், மண்டல இளை ஞரணி செயலாளர் பொன் செந்தில் குமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் அறிவன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இளவரசன், தொழி லதிபர் ராஜா, அசோகன், ஆண்டி மடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், ஒன்றிய துணைத் தலைவர் இராமகிருஷ் ணன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் .செந்தில், செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபால கிருஷ்ணன், அயன் ஆத்தூர் கருப்புசாமி, குழுமூர் .சுப்பராயன், மாவட்ட ..ஆசிரி யரணி தலைவர் இராஜேந்திரன், பொன்பரப்பி சுந்தரவடிவேல், சேட குடிக்காடு நீ.பெரியார் செல்வன், குமார், பெ. முருகன், தா.பழூர் ஒன் றிய அமைப்பாளர் சி. தமிழ்சேகரன், குறிச்சிக்குளம் முத்துக்கிருட்டிணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment