டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடாவின் கைக்கு சென்றது ஏர் இந்தியா. ரூ.18,000 கோடிக்கு ஏலம் எடுத்தது.
· இதர பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தக் கோரி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சட்டமன்றத்தில் முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஒன்றிய அரசில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 31 பேரை நேரடி நியமனம் மூலம் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்களாக யு.பி.எஸ்.சி. தேர்வு செய்துள்ளது.
தி டெலிகிராப்:
· கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டதற்கு எதிராக ஒன்றிய அரசு எழுப்பிய ஆட்சேபனைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உச்சநீதிமன்ற கொலீஜியம் மூன்றாவது முறையாக சாக்கியா சென்னின் பெயரை மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· தமிழ் நாட்டில் ஒன்றிய நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்துவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 4 பேர் உட்பட 39 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
. - குடந்தை கருணா
No comments:
Post a Comment