வடகொரியாவுக்கு கரோனா மருத்துவப் பொருட்கள் உலக சுகாதார அமைப்பு வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

வடகொரியாவுக்கு கரோனா மருத்துவப் பொருட்கள் உலக சுகாதார அமைப்பு வழங்கல்

பியாங்யாங், அக். 9- வடகொரி யாவுக்குத் தேவையான கரோனா மருந்துப் பொருட்களைக் கப்பல் வழியாக உலக சுகாதார அமைப்பு அனுப்பத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஊடகங் கள் தரப்பில், ''வடகொரி யாவுக்குத் தேவையான கரோனா மருந்துப் பொருட் களை உலக சுகாதார அமைப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. சீனா வின் தாலியன் துறைமுகத்திலிருந்து வடகொரியா வுக்கு மருத்துவப் பொருட் களை உலக சுகாதார அமைப்பு அனுப்பத் தொடங்கியுள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள் ளாகும்போது வடகொரி யாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்ப டாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் சீனா வழங்கிய சினோவாக் கரோனா தடுப்பூசியை வாங்க வடகொரியா மறுத்துவிட்டது. தங்கள் நாட்டில் யாருக்கும் கரோனா தொற்று ஏற் படவில்லை என வட கொரியா தெரிவித்தது.

கரோனா அச்சத்தால் வடகொரியா தொடர்ந்து எல்லைகளை மூடிவைத் துள்ளது. மேலும், அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகளிடமிருந் தும் பொருளாதாரத் தடை களை எதிர்கொண்டுள் ளது வடகொரியா.

அமெரிக்க மேனாள் அதிபர் ட்ரம்ப் ஆட்சி யில், ஏவுகணை தொடர் பாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் கடுமையான மோதல் நிலவியது. இதன் கார ணமாக வடகொரியாவின் மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட் டன. பொருளாதாரத் தடை கள் காரணமாக வடகொ ரியா உணவுப் பஞ்சத்தை யும் எதிர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment