ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை: இந்தியாவில் இருந்து உணவு தானியங்கள் நன்கொடை பெற அய்.நா. பேச்சு வார்த்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை: இந்தியாவில் இருந்து உணவு தானியங்கள் நன்கொடை பெற அய்.நா. பேச்சு வார்த்தை

காபுல், அக். 9- தலிபான்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான், கடுமையான பொருளா தார நெருக்கடியையும், உணவு தானியங்களின் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் அர சுக்கு இதுவரை அளித்து வந்த நிதி உதவியை பன் னாட்டு அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடு களும் நிறுத்தி விட்டதால் அங்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சிகளினா லும், உள்நாட்டுப் போரி னாலும் ஆப்கானிஸ்தா னில் உணவு தானியங்க ளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அய்.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பின் இயக் குநர் மேரி எலன் மெக் ரோட்டி கூறியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஆப்கா னிஸ்தானுக்கு இந்தியா 75 ஆயிரம் டன் கோது மையை நன்கொடையாக அளித்திருந்தது. இதை பாகிஸ்தான் வழியாக தரை மார்க்கமாக அனுப்ப அனுமதி கிடைக்காத தால், கப்பல் மூலம் ஈரா னுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஆப்கானிஸ் தானுக்கு சாலை மார்க்க மாக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் ஆப் கானிஸ்தானில் தற்போது உணவுப் பஞ்சம் உருவா கும் அபாயம் ஏற்பட்டுள் ளதால், இந்தியாவிடம் இருந்து ஆப்கானிஸ்தா னிற்கு உணவு தானியங் களை நன்கொடை பெற இந்திய அரசிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள் ளதாக அய்.நா.வின் மேரி எலன் மெக்ரோட்டி கூறி யுள்ளார். இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் 25 லட்சம் டன் அளவிற்கு உணவு தானியங்கள் பற் றாக்குறை ஏற்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித் துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு 100 கோடி டாலர்கள் அளவுக்கு நிதி உதவி மற்றும் இதர உதவிகளை அளிக்க, கடந்த மாதம் அய்.நா.வில் நடந்த கூட் டத்தில் பல்வேறு உலக நாடுகள் உறுதி அளித்தன. ஆனால் இவற்றை தலி பான்கள் மூலம் அனுப்பா மல், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நேரடியாக அனுப்ப உலக நாடுகள் விரும்புவதால், இதில் மேலும்சிக்கல்கள் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment