வயது வந்தோரைவிட குழந்தைகளுக்கு கரோனா தாக்க வாய்ப்பு குறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

வயது வந்தோரைவிட குழந்தைகளுக்கு கரோனா தாக்க வாய்ப்பு குறைவு

உலக வங்கி தகவல்

புதுடில்லி,அக்.5  வயது வந்தோரை விட 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தாக்க வாய்ப்பு குறைவு. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவ வும் வாய்ப்புகள் குறைவுதான் என்று உலக வங்கி கூறியுள்ளது.

உலக வங்கி  அறிக்கையில் கூறப்பட் டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பாக பள்ளிக்கூடங்களை திறந்த நாடுகள் உண்டு. அங்கு சமுதாயப் பரவல்தான் இருந்தது. பள்ளிக்கூட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது பள்ளிக்கு நேரில் பாடங்களை கற்பிக்க செல்வதில் ஏற்படும் அச்சத்தைப் போக் கும். என்றாலும் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு மாணவர்களும், ஊழியர் களும் பரவலாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை காத்திருக்க வேண்டியதில்லை.

தகுந்த கரோனா தணிப்பு யுக்தி களுடன் திறந்துள்ள பள்ளிக்கூடங்கள் மூலம் கிடைத்துள்ள அனுபவங்களால், பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு தொற்று பரவல் ஆபத்து குறைவாகவே இருக் கிறது என உலக வங்கியின் கல்விக்குழு கண்டறிந்துள்ளது.

இளம் குழந்தைகள் கரோனா தொற் றுப் பாதிப்புக்கு ஆளாகிற, தொற்று பாதித்து இறக்கிற வாய்ப்புகள் குறைவு என்றே சான்றுகள் கூறுகின்றன. பள்ளிக் கூடங்களில் தொற்று பரவும் வாய்ப்பு குறைவுதான். குறிப்பாக தொடக்கப் பள்ளிகளிலும், அங்கன் வாடிகளிலும் கரோனா பரவ வாய்ப்பு மிகக்குறைவு.

பள்ளிக்கூடங்களை தொடர்ந்து மூடி வைத்திருப்பதால், கரோனா தொற்று பரவும் ஆபத்தை இல்லாமல் செய்துவிடும். ஆனால், குழந்தைகள் கற்றுக் கொள்வதிலும், அவர்களின் மன நலத் திலும், ஒட்டுமொத்த வளர்ச்சி யிலும் அது பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

தற்போது உலகமெங்கும் 80 சதவீதம் அளவில் வழக்கம்போல பள்ளிக் கூடங்கள் திறந்து வகுப்புகள் நடை பெறுகின்றன. 54 சதவீத ஆசிரியர்கள் நேரில் வந்து பாடம் கற்பிக்கின்றனர்.

எங்கெல்லாம் அரசாங்கங்கள், சமூ கங்கள், ஆசிரியர்கள் அல்லது பெற் றோர்கள் பள்ளிக்கூடங்களைத் திறந் தால் கரோனா பரவுவதற்கு கூடுதல் வாய்ப்பாகி விடும் என அஞ்சுகின் றனரோ, அங்குதான் பள்ளிகள் மூடப் பட்டுள்ளன.

வயது வந்தோரை விட 10 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு கரோனா தாக்க வாய்ப்பு குறைவு. அவர்கள் மூலம் மற்றவர் களுக்கு பரவவும் வாய்ப்புகள் குறைவுதான்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment