கோவை, அக்.7 நீலகிரி மலைவாழ் மக்கள் பயன்பெற, கோத்தகிரியில் உள்ள, கோத்தகிரி மெடிக்கல் பெலோஷிப் மருத்துவமனைக்கு மைக்ரோலேன்ட் நிறுவனம் அதிநவீன இருதய, நரம்பு சிகிச்சைக்கு உதவும் ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.
மைக்ரோலேன்டின் தனது சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக, மைக்ரோலேன்ட் பவுண்டேஷன் இதை வழங்கியுள்ளது. கோத்தகிரியை சுற்றிலும் 10 கி.மீ., தெலைவில் உள்ள 41 கிராமங்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும். 33,570 மக்கள் தெகை கொண்ட இந்த கிராமங்களில் வசிக்கும் படுகா, கோடாஸ், தோடாஸ் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் பயன்பெறுவர். தரமான மருத்துவ சேவையை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் மைக்ரோலேன்ட் பவுண்டேஷன் மற்றும் கேஎம் மருத்துவமனையின் கடமைகள் குறித்து மைக்ரோலேன்ட் பவுண்டேஷன் கல்பனா கர் கூறுகையில், " கோவிட் 19 தொற்று காலத்தில் மருத்துவ அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பாடுபட்டு வருகிறது மைக்ரோலேன்ட் பவுண்டேசன்.
இதனுடன் இணைந்து செயலாற்றும் இந்த மருத்துவமனையும் சமுதாய சேவை உணர்வோடு செயல்பட்டு வருகிறது.
தொலைவில் உள்ள கிளினிக்குகள், மக்களுக்கு வீடுகளுக்கு சென்று மருத்துவ சேவை செய்யவும் மற்றும் திறன்மிக்க பயனுள்ள சேவையாற்ற இப்பகுதி மக்கள் நலமுடன் வாழ திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஆம்புலன்ஸ்சும் ஒன்றாகும் என்றார்.
No comments:
Post a Comment