ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

ஆதிச்சநல்லூர், அக். 11- வைகுண் டம் அருகே ஆதிச்சநல்லூரில் 10.10.2021  முதல் ஒன்றிய தொல் லியல் துறையின் அகழாய்வுப் பணி தொடங்கியது. உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சி யகம் விரை வில் இங்கு அமைக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றங்கரை யோர கிராமமான ஆதிச்சநல் லூரில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் சமீபத்தில் இங்கு அகழாய்வுப் பணி நடந்தது.

இங்கு கிடைத்தநெல்மணிகள் 3,200 ஆண்டுகளுக்கு முந்தையவை என உறுதிசெய்யப்பட்டதால், தேசிய அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்களை வெகுவாக ஆதிச்சநல்லூர் கவர்ந் துள்ளது.

இதனிடையே, கடந்த 2019 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், `ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்தஅருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று, ஒன்றியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்கான இடங்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினரால் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

ஒன்றியதொல்லியல் துறை யின் திருச்சி தென்மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியை நேற்று (10ஆம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதுகுறித்து, ஒன்றிய அகழாய்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இரும்புக் கால தொல்லியல் தளமானஆதிச்சநல்லூரை, தொல்பொருள்தளமாக அபிவிருத்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக அகழாய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் விரைவில் மேற்கொள்ள உள்ளது.

ஒன்றிய நிதிநிலை அறிக் கையில் அறிவித்தபடி, நாட்டில் வரலாற்றுச் சின்னமான தளங் களாக உருவாக்கப்படும் 5 தொல் பொருள் தளங்களில் ஆதிச்ச நல்லூரும் ஒன்றாகும். தென்னிந் தியாவில் அமையவுள்ள ஒரே தளம் இதுவே. 2004-2005ஆம் ஆண்டில் ஆதிச்ச நல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது மனித எலும்புக்கூடுகள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துகள், பானை ஓடுகள் மற்றும் இரும்புக் கால மக்களின் வாழ்விடத் தளத் தின் எச்சங்கள் கிடைத்துள்ளன.

ஒன்றியதொல்லியல் துறை சென்னை வட்டத்தைப் பிரித்து, புதிதாக திருச்சி நிர்வாக வட்டம், கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி உருவாக்கியது. தென் தமிழ் நாட்டின் 160 ஒன்றிய நினைவுச் சின்னங்கள் திருச்சி வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆதிச்சநல்லூர் கி.மு. 1,000க்கு முந்தைய நாட்டின் மிகப் பழைமையான இரும்புக் கால தளங்களில் ஒன்றாகும்.

தென்னிந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த அருங் காட்சியகம் முதன்முதலாக இங்கு தான் அமைக்கப்பட உள்ளது.

இங்கு இதுவரை எடுக்கப் பட்ட அனைத்துப் பொருட்களும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

அத்துடன், அகழாய்வு நடந்த குழிகளின் மேல் கண்ணாடி தரைத்தளம் அமைத்து, அதன் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்றுஅகழாய்வு நடந்த பகுதிகளைப் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப் படும்.

இத்தகைய அமைப்பு அய் ரோப்பாவில் உள்ளதுஎன தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment