இதர பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு கோரி தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

இதர பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு கோரி தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

அய்தராபாத்,அக்.10-   இதர பிற்படுத்தப் பட்டோர் (ஓபிசி) கணக்கெ டுப்பை ஒன்றிய அரசு நடத்தக் கோரி  தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட் டது. நாடு முழுவதும் ஜாதி வாரியாக கணக் கெடுப்பு நடத்தும்படி ஒன்றிய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியு றுத்தி வருகின்றன.

ஆனால், ஒன்றிய பாஜக அரசு இதை நிரா கரித்து வருகிறது. தெலுங் கானா முதலமைச்சர் சந் திரசேகர ராவும், பிற்படுத் தப்பட்டோர் கணக் கெடுப்பை நடத்துவதற்கு ஆத ரவு தெரிவித்தார்.

இந்நிலை யில், தெலுங் கானா சட்ட மன்றத்தில் வெள்ளியன்று முதல மைச்சர் சந்திர சேகர ராவ் பேசுகையில்,  நாடு முழுவதும் பல்வேறு அர சியல் கட்சிகள் மற்றும் மாநில சட்டமன்றங்க ளில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி வரு கின்றனர். மாநில மக்கள் தொகையில் 50 சதவீதம் வரை பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் போது மான வாய்ப்புக்கள் வழங் கப்பட வேண்டும். அதற்கு, துல்லியமான மக்கள் தொகை புள்ளி விவரங் களை பராமரிக்க வேண் டியது அவசியம். எனவே ஜாதிவாரி கணக்கெ டுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும், என்றார். மேலும் இதர பிறப்டுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை நடத்தக் கோரிய தீர்மா னத்தை அவர் முன்மொழிந்தார். அது, ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது.

No comments:

Post a Comment