சென்னை புளியந்தோப்பு குடியிருப்புகளின் தரம் ஆய்வு - கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

சென்னை புளியந்தோப்பு குடியிருப்புகளின் தரம் ஆய்வு - கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சென்னை,அக்.5-  சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதி யில் 2016-இல் ரூ.112 கோடியில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப் பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அங்கு மேற்கொண்டனர்.

இதற்கிடையே, சென்னை அய்அய்டி பேராசிரியர் பத்ம நாபன் தலைமையிலான நிபுணர் குழு, கே.பி.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒரு மாதத்துக்கும் மேலாக ஆய்வு செய்தது.

சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவிடம், அய்அய்டி குழுவின் ஆய்வறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

"இந்தக் குடியிருப்புகள் உரிய தரத்துடன் கட்டப்படவில்லை. எனவே, அதைக் கட்டிய கட்டு மான நிறுவனம் மீதும், வாரியத்தின் இரு அதிகாரிகள் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த குடியிருப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனம், மாநிலத்தின் பிற பகுதிகளில் கட்டி யுள்ள கட்டடங்களையும் ஆய் வுக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன், இந்த கட்டுமான நிறுவனத்தை தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை ஆய்வுக் குழு அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment