டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· சிறையில் இருந்து பீகார் திரும்பியதும் புது உத்வேகம். 6 ஆண்டுக்கு பிறகு பிரச்சாரத்தில் குதித்தார் லாலு பிரசாத்.
· பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு அமைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
· பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் அலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து தாங்கள் கூறிய புகாருக்கு உச்சநீதிமன்ற உத்தரவு வலு சேர்த்துள்ளது. உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் விசாரணையில் உண்மை வெளிவரும் என்று நம்புகிறோம் என ராகுல்காந்தி பேட்டி
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· கனடா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் பிறந்த அனிதா ஆனந்த் நியமனம்.
· துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அரசு வழக்குரைஞர் தகவல்
டைம்ஸ் ஆப் இந்தியா:
· தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 29ஆம் தேதி கீழடி அகழ்வாராய்ச்சி பகுதிக்கு சென்று கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட உள்ளார்.
தொழிலாளர் குறியீடுகள் தமிழ்நாட்டின் கூட்டாட்சிக்கான திறவுகோல் என வழக்குரைஞர் செல்வி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்ற மேலவையை மீண்டும் துவங்க மசோதா வரும் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment