ரூ.107-அய் நெருங்குகிறது பெட்ரோல் - லிட்டருக்கு 31 காசு உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

ரூ.107-அய் நெருங்குகிறது பெட்ரோல் - லிட்டருக்கு 31 காசு உயர்வு

சென்னை, நவ.3  பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. இடையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் சற்று குறைந்து இருந்த நிலையில், அதன் பிறகு மீண்டும் உச்சத்தில் பயணிக்க தொடங்கியது. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் (2.11.2021) பெட்ரோல் விலை ஏறுமுகத்தில் இருந்தது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 31 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 106 ரூபாய் 66 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், இன்னும் ஓரிரு நாள்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107-அய் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை எப்போதெல்லாம் உயருகிறதோ? அப்போதெல்லாம் டீசல் விலையிலும் மாற்றம் இருக்கும். அவ்வாறு தான் விலை மாற்றம் கடந்த நாட்களில் இருந்து வந்தது. ஆனால் நேற்று பெட்ரோல் விலையில் மாற்றம் இருந்த அதே நேரத்தில் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்று முன்தினம் (1.11.2021) விலையிலேயே விற்பனை ஆனது. அந்தவகையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் 102 ரூபாய் 59 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment