திண்டுக்கல்,நவ.3- உலகின் 2 விழுக்காடு சிறந்த அறிவியலாளர்கள் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 அறிவியலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று (2.11.2021)வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
உலகத்தரம் வாய்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அறிவிய லாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள், அதற்கான மேற்கோள்கள் தரப் படுத்தப்பட்ட ஒரு கூட்டுக் குறி காட்டி மூலமாக ஓராண்டு கால தாக்கத்துக்கு வகைப்படுத்தப் பட்டது.
மேலும், மேற்கோள்கள் இல்லாத அளவீடுகள், மேற்கோள் தாள்கள் விகிதம் ஆகியவற்றின் மூலமாக 22 அறிவியல் துறைகள் மற்றும் 126 துணைத் துறைகளில் அறிவியலாளர்கள் வகைப் படுத்தப் பட்டிருந்தனர்.
குறைந்தபட்சம் 5 கட்டுரைகளை வெளியிட்ட அனைத்து அறிவியலாளர்களும், புலன் மற்றும் துணை புலம் சார்ந்த விழுக் காடுங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப் பட்டனர்.
இதில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ப.பாலசுப்பிர மணியம் (கணிதத் துறை), எஸ். ஆபிரகாம் ஜான் மற்றும் எஸ். மீனாட்சி (வேதியியல் துறை) ஆகிய 3 பேரும் தொழில் மற்றும் நீண்ட தாக்கத்துக்குள் வகைப்படுத்தப்பட் டுள்ளனர்.
மேலும், ஓராண்டு தாக்கத்துக் கான பட்டியலில், அறிவியலா ளர்கள் எஸ். மீனாட்சி மற்றும் ப.பாலசுப்பிரமணியம் ஆகியோ ருடன், எம்.ஜி. சேதுராமன் (வேதி யியல் துறை), கே. மாரிமுத்து (இயற்பியல் துறை) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் 2 விழுக்காடு சிறந்த அறிவியலாளர்கள் பட்டியலிலும், இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ப. பாலசுப்ர மணியம், கே. ராமச்சந்திரன், எம்.ஜி. சேதுராமன், எஸ். மீனாட்சி, எஸ். ஆபிரகாம் ஜான், கே. மாரிமுத்து மற்றும் ஜி. சிவராமன் ஆகிய 7 பேர் இடம் பெற்றிருந்தனர்.
தற்போது இரண்டாவது முறையாக ப. பாலசுப்பிரமணியம், எஸ். மீனாட்சி, எஸ். ஆபிரகாம் ஜான், கே. மாரிமுத்து, எம்.ஜி. சேதுராமன் ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment