திருவனந்தபுரம், நவ. 2 கேரள மாநிலம் கண்ணூர் மாவட் டம் சிற்றி பகுதியை சேர்ந்தவர் அப்துல் சத்தார். அவரது மகள் பாத்திமா (11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். சத்தாருக்கு மந்திர வாதத்தில் குருட்டுத் தனமான நம்பிக்கை உண்டு. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாத்திமாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லாமல் ஒரு மந்திரவாதியை சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளார்.
இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. இந்த நிலையில் பாத்திமாவின் உடல் நிலை மோசமானது. அதன் பிறகு கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக் காமல் பாத்திமா பரிதாபமாக இறந்தார்.
No comments:
Post a Comment