புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2021) வேலூர் மாவட்டம், மேல்மொணவூரில் நடைபெற்ற புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தற்போதைய நிலை மற்றும் மேம்படுத்தப்படவுள்ள நிலை குறித்த விளக்கப் படங்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment