புதிய வேளாண் சட்டங்களை நவ. 26-க்குள் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

புதிய வேளாண் சட்டங்களை நவ. 26-க்குள் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்

விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் எச்சரிக்கை

புதுடில்லி, நவ.3  புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி, டில்லி எல்லை பகுதிகளில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக விவ சாயிகள் போராடி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் அதை பரிசீலிப்போம் என்று ஒன்றிய அரசு கூறியது. அதை ஏற்காமல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் பாதிப்பை ஏற்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் போராட்டம் நடத்தும் பகுதியில் வைத்திருந்த தடுப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில், பாரதிய கிசான் யூனியனின் டில்லி மாநிலத் தலைர் குர்நாம்சிங் கூறும்போது, "எங்களை போராட்டக் களங்களில் இருந்து அகற்ற முயன்றால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு குடியிருப்பின் முன்பாக அமர்ந்து தீபாவளி கொண்டாடுவோம்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், நவ. 26-க்கு முன்பாக விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

இது குறித்து போராட்டக் குழுவின் முக்கிய உறுப்பினரும், பாரதிய கிசான் யூனியனின் தேசியத்தலைவருமான ராகேஷ் டிகைத் கூறும்போது, ‘எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு மறைமுகமாக முயல்கிறது. நவ. 26-க்குள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் மறுநாள் முதல், டில்லியில்4 எல்லைகளிலும் விவசாயிகள் குவிவார்கள். நிரந்தர முகாம்கள் அமைத்து போராடத் தயாராக உள்ளோம்என எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment