ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

திருவள்ளூர், நவ. 3- சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட அலுவலக பராமரிப்பில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை ட்ரோன் கேமரா மூலம் கண்கா ணிக்கும் பணியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை கண்காணித்து அகற்றுவதற்காகவும், நீர் நிலைக ளின் மட்ட அளவுகளை நேரடியாக கட்டுப்பாட்டு அறையினர் கண் காணிக்கவும் 60 மைக்ரோ வகை ட்ரோன் கேமராக்கள் மற்றும் 9 சிறிய வகை கேமராக்களை வாங்குவ தற்கு தமிழ்நாடு அரசு ரூ.8.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள வாறு தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலையாறு வடி நில கோட்ட அலுவலக பராமரிப் பில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப் புகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் வருவாய் துறை யின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற பொதுப்பணித் துறை ஊழியர்கள் களம் இறங்கி யுள்ளனர். இதன் முன்னோட்டமாக திருவள்ளூர் மாவட்ட கொசஸ் தலையாறு வடிநில கோட்ட பரா மரிப்பில் உள்ள பாண்டூர், கைவண் டூர் ஆகிய ஏரிகளில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் ஏரியின் உள்வாய் மற்றும் வரவுக் கால்வாய் பகுதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண் காணிக்கப்பட்டன.


No comments:

Post a Comment