கொரட்டூர் பகுத்தறிவுப் பாசறையின் சிறப்பு நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

கொரட்டூர் பகுத்தறிவுப் பாசறையின் சிறப்பு நிகழ்வு

கொரட்டூர், நவ.3 கொரட்டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் நிகழ்வு  285ஆவது வாரம் 23.10.2021 அன்று நடைபெற்றது.

பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக வழக்குரைஞர் வெ.பன்னீர்செல்வம் முன்னிலையில் இரா.பிச்சைமணி தலைமையிலும் பெரியார், அண்ணா, கலைஞர், தமிழர் தலைவர், அன்னை மணியம்மையார் பொன்மொழிகளுடன் கூட்டம் இனிதே தொடங்கியது.

அன்றைய தினத்தில் 22.10.2021 அன்று நாட்டுப் பாதுகாப்புக்காக உயிர் நீத்த காவலர் தினம் நினைவு கூறப்பட்டது. உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு இரண்டு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது. பாசறையின் வேண்டுகோளின்படி நமது கொரட்டூர் காவல் நிலைய அலுவலரின் அனுமதியின் பேரில் காவலர் பரிபாலன் கலந்து கொண்டு காவலர்களின் கடுமையான உழைப்பினையும், உயிர்நீத்த தியாகிகளைப்பற்றியும், பாசறை சிறப்பாக செயல்படுவதாகவும், அறிவைப் பெருக்கும் வகையில் கல்வியில் சிறந்து முன்னேற மாணவ, மாணவியர்கு அறிவுரை வழங்கினார்.

2ஆவது நிகழ்வாக திராவிடப் பரிதி (19.10.2021), ஹேமா (11.10.2021)ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்தக்கூறி இனிப்பு வழங்கப்பட்டது. இன்பநிலாவின் நன்றியுரையோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

வடகிழக்கு பருவமழை தீவிரம்

90 அணைகளில் நீர் இருப்பு அதிகரிப்பு

சென்னை,நவ.3-  வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால், 90 அணைகளின் நீர் இருப்பு, 183 டி.எம்.சி., யாக அதிகரித்துள்ளது.நீர்வளத் துறை பராமரிப்பில் மாநிலம் முழுதும், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., ஆகும். இந்த அணைகள் வாயிலாக, மாநிலத்தின் பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன. இவற்றில் மேட்டூர், முல்லை பெரியாறு உள்ளிட்ட 15 அணைகள் முக்கியமானவை. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி.,யாகும். தற்போது, 90 அணைகளிலும் 82 சதவீதம் அளவிற்கு 183 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. பல அணைகள் நிரம்பும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. இரண்டு நாட்களாக பல அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இதனால், நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 10 ஆயிரத்து 858 கன அடி நீர்வரத்து கிடைத்தது. பவானிசாகருக்கு வினாடிக்கு 2,781; முல்லை பெரியாறுக்கு 3,952; வைகைக்கு 1,940; பாபநாசத்திற்கு 1,225; பரம்பிக்குளத்திற்கு 1,410; பேச்சிப்பாறைக்கு 1,127 கன அடி நீர்வரத்து கிடைத்தது. மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்கிறது. எனவே, அணைகளில் நீர் கொள்ளளவு உயர்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. அரசு உத்தரவுப்படி, அணைகளை நீர்வளத் துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment