காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்
சென்னை, நவ.5 2ஜி அலைக்கற்றை விவ காரத்தில் நடைபெற்ற சதி அம்பலத்திற்கு வந்துள்ளதால், பிரதமர் மோடி, வினோத் ராய் ஆகியோர் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் கூறி னார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான சல்மான் குர்ஷித், தமிழ்நாடுகாங்கிரஸ் கட்சியின் தலைமை அலு வலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கடந்த 2.11.2021 அன்று வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்ட தாக ஆதாரமற்ற முறையில் அன்றைய சிஏஜி தலைவர் வினோத் ராய் கூறியிருந்தார். இதனைப் பயன்படுத்தி 2014 தேர்தலில் பாஜ ஆட்சி அமைத்தது.
சிஏஜி அறிக்கையிலிருந்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை நீக்குமாறு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிருபம் அழுத்தம் கொடுத்ததாகத் தான் கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று கூறி, கடந்த அக் டோபர் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிபந் தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
இதன்மூலம் 2ஜி அலைக்கற்றை விவகா ரத்தில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிரான சதி முழுமையாக வெளிப்பட்டுள்ளது. இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத் ராய் முகவராக செயல்பட் டிருப்பது தெரியவந்துள்ளது.
2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் அரசு கருவூலத்துக்கு ரூ.1.76 லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் இவர் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த சதி உண்மைதான் என்பதை நிரூ பிக்கும் வகையில் மோடி பிரதமரானதும், வங்கி தேர்வு வாரியத்தின் தலைவராக வினோத் ராய் நியமிக்கப்பட்டார். மோடி பிரதமராகி விட்டார். எனவே, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும், வினோத் ராயும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் காங் கிரசும், திமுகவும் பாதிக்கப்பட்டன. ஆனால், நீதிமன்றத்தில் உண்மை நிரூபிக்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment