கடந்த 7 ஆண்டுகள் உலகவரலாற்றில் மிகவும் வெப்பமான காலம் ஆகும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

கடந்த 7 ஆண்டுகள் உலகவரலாற்றில் மிகவும் வெப்பமான காலம் ஆகும்

உலக வரலாற்றில் கடந்த 7 ஆண்டுகள் மிகவும் வெப்பமான காலக்கட்டம் என்று பருவநிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக வானிலை ஆய்வக அமைப்பின் அறிக்கை COP26  பருவநிலை மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

வெப்ப வாயுக்களின் வெளியேற்றம் இதுவரை இல்லாத அளவில் பதிவானது, முக்கியக் காரணமெனக் கூறப்பட்டது.

2013-ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கடல் மட்டம் கணிசமாக உயர்ந்தது; பனிப்பாறைகளும் பனிப்படலங்களும் மேலும் விரைவாக உருகின என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கிருமிப்பரவல் சூழலில் முடக்கநிலை நடப்புக்கு வந்ததும் தூய்மைக்கேடு அதிகம் விளைவித்த துறைகள் மூடப்பட்டதும், அவ்வளவாகப் பலன் தரவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டது.

அறிக்கை முடிவுகள், COP26  மாநாட்டில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கு உதவியுள்ளன.

அதிகரிக்கும் வெப்பநிலையையும் அதன் தாக்கத்தையும் எதிர்த்து உலக அளவில் நடவடிக்கை எடுக்க, சிளிறி26 மாநாடே இறுதி வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment