சுஹ்ரித் பார்த்தசாரதி
இந்திய குடிமக்கள் பயன்படுத்தி வந்த கைப்பேசி களை அணுகி, அவற்றில் உள்நுழைந்து வேவு பார்ப்பதற்கு பெகாசஸ் வன்பொருள் செயலியை இந்திய அரசு பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்து தெரிவிப்பதற்காக இந்திய உச்ச நீதிமன்றம் சுதந்திரமான குழு ஒன்றினை கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று நியமித்தது. நீதிமன்றத்தின் இந்த ஆணை பொதுவாக வரவேற்கப் பட்டு, போற்றி பாராட்டப்பட்டுள்ளது. ஆனாலும், அதனைப் பற்றி புகழ்ந்து பாடுவதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். சட்டத்தைப் பற்றி நீதிமன்றம் தெரிவித்துள்ள அறிவுப் புகள் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக இருந்த போதிலும், நீதிமன்றத்தின் ஆணை இன்னமும் நியா யம் அளிப்பதாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.
இன்னமும் நியாயம் வழங்கப்படுவதற்கு உத்தரவாதம் இல்லை
பெகாசஸ் வேவு பார்க்கும் வன்பொருள் செய லியை அரசு பயன்படுத்தியதா இல்லையா என்பதை உறுதியாகத் தெரிவிக்கும் முறையான பிரமாண பத்திரம் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒன்றிய அரசு தீர்மானமாக மறுத்துள்ளதை பார்க்கும் போது, ஒன்றிய அரசை சாட்சியம் அளிக்கும்படி வலியுறுத்தி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் என்று எவர் ஒருவரும் நினைத்திருக்கக் கூடும். அதற்கு மாறாக, இதில் உள்ள உண்மையைக் கண்டறிய வல்லுநர் குழு ஒன்றினை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. நீதிமன்றத்தின் முன் பேசாமல் வாய்மூடி மவுனமாக இருந்த ஒன்றிய அரசு, இந்த விசாரணைக் குழுவின் முன் அனைத்து உண்மை களையும் இப்போது ஒப்புக் கொள்ளும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. விசாரணைக் குழுவுடன் ஒத்துழைப்பதற்கு அரசு மறுத்தால், உச்சநீதிமன்றம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வியே. உலகளாவிய ஊடகங்களின் ஒரு கூட்டமைப்பு விசாரணை செய்து வெளியிட்டுள்ள அறிக்கைகளை சார்ந்தே மனுதாரர்கள் உச்சநீதி மன்றத்தின் முன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். என்.எஸ்.ஓ. என்ற ஓர் இஸ்ரேலிய குழு தனது வாடிக்கையாளர் களுக்காக உலக அளவில் வேவு பார்ப்பதற்காகத் தேர்ந்து எடுக்கப்பட்ட 50,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களில் நூற்றுக்கணக்கான இந்தியர் களின் தொலைபேசி எண்களும் உள்ளன என்று இந்த அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. தங்களது வேவு பார்க்கும் வன்பொருள் செயலி, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடும் நோக்கத்திற்காக அரசுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளது என்பதை இந்த என். எஸ்.ஓ. அமைப்பு இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் முன் மனு அளித்துள்ள இந்தியர்கள் உள்ளிட்ட குறைந்தது 10 இந்தியர்களின் தொலை பேசிகளை பெகாசஸ் செயலி வேவு பார்த்திருப்பதற் கான தடயவியல் பகுத்தாய்வு உறுதிப்படுத்தியுள்ளது என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
காலத்தால் சோதித்து அறியப்பட்ட உத்தி
ஆனால் இந்த வழக்கு, நமக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான சிலபல சவால்களை அளிப்பதாக உள்ளது. தங்களுக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்கு மாறாக, இந்திய ஒன்றிய அரசு தங்களுக்கு மிகவும் பிரியமான, வழக்கமான தேசிய பாதுகாப்பு என்ற சாக்கையே பயன் படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது, உண்மையில் இந்த வேவு பார்க்கும் செயலியை அரசு பயன்படுத்தியதா இல்லையா என்று நீதிமன்றத்துக்குக் கூறவேண்டிய கட்டாயம் தங்க ளுக்கு இல்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் அரசு கூறுவது என்ன வென்றால், அரசு மேற்கொள்ளும் இத்தகைய வாதமே, இந்த விஷயத்தில் உச்சநீதி மன்றம் மேலும் மேலும் தொடர்ந்து விசாரணை செய்வதைத் தடுப்ப தாகவே அமைந்து இருப்பதாகும். கடந்த காலங்களில் அரசின் நிலைப் பாட்டின் வெற்றிக்கு இந்த உத்தி பெருமளவில் உதவியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு தொடர்பானவை என்று கூறப்படும் இத்தகைய விஷயங்களில், அரசின் நிலைப்பாட்டுக்கு மரியாதை அளித்து, அதன் கருத்து மற்றும் முடிவுகளை உச்சநீதி மன்றம் அசாதாரணமான முறையில் ஆதரித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வழக்குகள், உண்மையைப் பற்றியதொரு போட்டி என்ற மற்றுமொரு தடையையும் ஏற்படுத்தி யுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக தாங்கள் வேவு பார்க்கப்படுவதாக மனுதாரர்கள் உறுதிபடக் கூறு கின்றனர். அவர்களது குற்றச்சாட்டுகள் பற்றி அரசு வெளிப்படையாக எந்த வித பதிலும் அளிக்காமல் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, இதில் உள்ள உண்மையை உச்சநீதிமன்றம் எவ்வாறு வெளியே கொண்டுவரப்போகிறது? அரசு நிருவாகத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளையெல் லாம், முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவது என்பது அரசமைப்புச் சட்ட நீதிமன்றங்களின் நீதிபரி பாலன வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், அர சுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராக ரிக்கும் வழக்கத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க இயலாத படி அண்மைக் காலத்தில் மேற்கொண்டு வருகின்றன என்பதை மறுபடியும் இங்கு குறிப்பிட வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
இப்போது ஒரு விசாரணைக் குழுவை நிர்ணயித் துள்ள உச்ச நீதிமன்றத்தின் ஆணையில், அரசின் நிலைப்பாட்டுக்கு முழுமையான மரியாதையும் ஆதரவும் தரும் தங்களது போக்கையும், வழக்கத்தை யும் உச்ச நீதிமன்றம் உதைத்துத் தள்ளியுள்ளது. தேசிய பாதுகாப்பு என்னும் மந்திரதந்திர வித்தை யைக் காட்டும் சூத்திரம் எதனையும் அரசு வைத் திருக்கவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது என்று அரசு நிருவாகம் கூறுவதால் மட்டுமே அரசின் செயல்பாடுகளைப் பற்றி மறுஆய்வு செய்யும் அதிகாரத்தை நீதித்துறை இழந்துவிடவில்லை என்றும் நீதிமன்றம் உறுதிபடக் கூறியுள்ளது.
தங்களது செயல்களுக்கு அரசு பொறுப்பேற்று பதில் சொல்லும் பாதை
அரசினாலோ அல்லது வெளியே இருக்கும் ஓர் அமைப்பினாலோ தனிப்பட்ட ஒரு மனிதன் மீது வேவு பார்ப்பது என்பது அவரது தனிப்பட்ட வாழ்க் கையில் குறுக்கிடுவதாகவே ஆகும் என்று உச்சநீதி மன்றம் தனது ஆணையில் மிகச் சரியாகவே கூறி யுள்ளது. இதனால் அனைத்து வகையான வேவு பார்க்கும் பணிகள் அனைத்துமே சட்டத்திற்குப் புறம் பானவை என்று கூறுவதற்கு முன் வரவில்லை. ஆனாலும், அடிப்படை உரிமை மீது விதிக்கப்படும் எந்த ஒரு வரையறையும் தேவைக்கு ஏற்றதாகவும், ஆதாரங்கள், சாட்சியங்களின் அடிப்படையிலானவை களாகவும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தின் ஆணை முடிக்கிறது. சட்டத்தின் ஆட்சியால் நிருவகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாட்டில், அரசமைப் புச் சட்டத்தின் கீழான சட்டத்தினால் நிலை நாட்டப் பட்ட நடைமுறையைப் பின்பற்றாமலும், சட்டப்படி போதுமான பாதுகாப்புகள் இல்லாமலும், தனிப்பட்ட குடிமக்கள் மீது வரையறையற்ற முறையில் வேவு பார்ப்பதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிபடக் கூறியுள்ளனர்.
இவ்வாறு தீர்ப்பளித்ததன் மூலம், நாட்டு குடிமக்களை வேவு பார்க்கும் ஒரு செயல் நான்கு ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றம் குடிமக்களின் அடிப்படை உரிமையை பயன்தரும் அளவில் அங்கீ கரித்துள்ளது. முதலாவது அத்தகைய செயல்பாட்டுக்கு ஆதரவான சட்டம் ஒன்று இருக்க வேண்டும். குடி மக்களின் அடிப்படை உரிமைகள் மீது மேற்கொள்ளப் படும் வரையறை நியாயப்படியான, சட்டப்படியான அரசின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை அரசு நீதிமன்றத்துக்கு எடுத்துக் காட்ட வேண்டும். அந்த நோக்கத்தை எட்டுவதற்கு அதை விட குறைந்த அளவு குறுக்கீடு இருக்கும் வேறு வகையிலான வழிகள் இல்லை என் பதை அரசு எடுத்துக் காட்டவேண்டும். குடிமக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரையறைகளுக்கும், அந்த நடவடிக்கையின் கீழ் அமைந்துள்ள நோக்கங் களுக்கும் இடையே நியாயப்படியான, பகுத்தறிவுடன் கூடிய தொடர்பு இருப்பதை அரசு நிலை நாட்ட வேண்டும்.
இந்த சோதனைகள் எல்லாம், தனது செயல்பாடு களுக்கு பொறுப்பேற்று அரசினை பதில் கூற வைப் பதற்கான தெளிவான ஒரு பாதையைக் காட்டுகின்றன. ஆனால், பொருள் பதிந்த நியாயமானதொரு முறை யில் மேற்கொள்ளப்படும் இத்தகைய தரசோதனை களின் அடிப்படையில் உண்மைகளைப் பற்றியதொரு முடிவுக்கு நீதிமன்றம் வரவேண்டும். சாதாரணமாக, யுக்தானுசார வழக்குகளின் விசாரணையில், ஒரு பிரமாண பத்திரத்தின் மூலம் சாட்சியம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேறு சொற்களில் கூறுவதானால், வழக்கின் உண்மைகளைப் பற்றிய தங்களது கருத்து களையும், வாதங்களையும் எழுத்து மூலமான ஒரு பிரமாண பத்திரத்தின் மூலம் சத்தியப் பிரமாணம் செய்து வாதி, பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றுதான் கூறலாம்.
பெகாசஸ் வழக்குகளில், ஒவ்வொரு மனுதாரரும் , பத்திரிகையாளர் முதற்கொண்டு, சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட இந்திய குடிமக் களின் கைப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன என்பது பற்றிய ஒவ்வொரு உண்மைகளின் தொகுப்பு களை சத்தியப் பிரமாணம் செய்து அளித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் முறை யில், வரையறை செய்யப்பட்ட பிரமாண பத்திரம் என்று விவரிக்கப்படுவதற்கு மேலாக எந்த ஓர் உண்மையையும் ஒரு பிரமாண பத்திரத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்வதற்கு அரசு மறுத்து விட்டது. மனுதாரர்களின் குற்றச்சாட்டுகளை பொது வாக மறுத்தது மட்டுமன்றி, கைமேல் விசாரணை நடந்து வரும் வழக்குகளைப் பற்றிய தெளிவான உண்மைகளை அரசு அளிக்கவில்லை என்பது உச்சநீதிமன்றத்தினால் காணப்பட்டது.
உச்ச நீதிமன்றம் அடுத்து செய்ய வேண்டியது என்ன?
அரசின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒட்டு மொத்தமாக மறுப்பு தெரிவிக்காத நிலையில், வேறு எதற்காக இல்லாவிட்டாலும், மனுதாரர்களின் கோரிக்கைகளில் உண்மை இருக்கிறது என்ற முடி வுக்கு வருவதற்கான வழிகாட்டுவதாக உச்சநீதிமன்றத் தின் இந்த ஆணை இருக்கிறது. அவ்வாறு தீர்ப்பு அளித்த பிறகு, குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் பதில் கூறும்படி கேட்கும் குறிப்பிட்ட கேள்விகளை உச்சநீதி மன்றம் உருவாக்கித் தந்திருக்க வேண்டும் என்றுதான் எவர் ஒருவரும் எதிர்பார்த்திருப்பார்கள். அந்தக் கேள்விகளில் கீழ்க்கண்ட கேள்விகளும் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
பெகாசஸ் வேவு பார்க்கும் வன்பொருள் செயலியை இந்திய அரசு வாங்கியுள்ளதா? இந்திய குடிமக்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதற்கு அந்த செயலி பயன்படுத்தப்பட்டதா? பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்றால், அதற்கு சட்டப்படியான அனுமதியோ பக்க பலமோ இருக்கிறதா? அவ்வாறு பயன்படுத்தப்படுவதை அனுமதிப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டதற்கான காரணங்கள் யாவை?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இப்போதும் கூட அரசிடமிருந்து பதில் வராவிட்டால், பாதிக்கப்படும் அளவில் குறுக்கிடுவது என்று அறியப்பட்டதொரு முடிவுக்கு நீதிமன்றம் வருவதற்கு, சாட்சிய சட்ட விதிகளின் பாலபாடம் அனுமதிக்கிறது. தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தவறியவர், தனக்கு எதிராக நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் ஆபத்துக்கு உள்ளாகிறார். இந்த அடிப்படை யில் மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் உண்மையா னவை என்று முடிவு செய்யப்பட்டால், குடிமக்களின் அடிப்படை உரிமை சட்டத்திற்குப் புறம்பாக மீறப் பட்டுள்ளது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வர இயலும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அதன் பின் உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு அனைத்து விதமான நிவாரணங்களையும் வழங் கலாம். அரசின் பக்கம் தவறு இருக்கிறது என்று அறிவித்து, பெகாசஸ் செயலி வாங்கப்பட்டது, பயன் படுத்தப்பட்டது தொடர்பான அனைத்து உண்மை களையும் தெரிவிக்கும்படி அரசை நிர்ப்பந்திக்கும் ரிட் ஆணை ஒன்றையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக் கலாம். நீதிமன்றம் தானாகவே சாட்சியங்களைத் திரட்டுவதற்கும், முக்கியமான வழக்குகளில் சாட்சி களை குறுக்கு விசாரணை செய்வதற்குமான அதி காரத்தையும் கூடப் பெற்றிருக்கின்ற போதிலும், இது பற்றி விசாரணை செய்வதற்கான வல்லுநர் குழு ஒன்று ஏன் தேவை என்பது நமக்கு தெளிவாகத் தெரியவில்லை. சாட்சியங்களைத் திரட்டும் பணி எவ்வாறாவது நீதிமன்ற செயல்பாட்டு எல்லையைக் கடந்ததாக இருக்கும் போது வேண்டுமானால், அந்த பணிக்காக மட்டுமாவது ஒரு குழு தேவைப்படலாம்.
இறுதியாக, சாட்சியங்கள் மற்றும் சாட்சிய விதிகள் பற்றிய கேள்விகளை எதிர்காலத்தில் உச்சநீதி மன்றம் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும். தற்காலிக விசாரணைக் குழுக்கள் நியமிப்பது என்பது, அவற் றின் உறுப்பினர்கள் எவ்வளவுதான் மிகச் சிறந்தவர் களாக இருந்த போதிலும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்க முடியாது. இத்தகைய வெளிப்புற உறுப்பினர்கள் கொண்ட எண்ணற்ற தற்காலிக விசா ரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு பல வழக்குகள் விசாரணைக்கு அளிக்கப்பட்ட போதிலும், அவை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதன் காரணமாக பல வழக்குகளில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் சமரசம் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
இப்போதைக்கு, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தனது மேற்பார்வையில், கவனத்தில் கொண்டு இருக்கிறது என்பது உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. இந்த வழக்குகள் அடுத்த முறை விசாரணைக்காக 8 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்படும்போது, வல்லுநர் குழு விசாரணையை அரசு தாமதிக்கச் செய்கிறது என்று கருதினாலோ அல்லது குழு செயல்படுவதைத் தடுக்கிறது என்று கருதினாலோ, அரசின் செயல்பாடுகள் சட்டத்திற்குப் புறம்பானவை என்று உச்சநீதிமன்றம் தனது யுக்தானுசார அதிகாரத் தைப் பயன்படுத்தி அறிவிப்பு ஒன்றை வெளியிடு வதுடன், தனது அரசமைப்புச் சட்டப்படியான கடமை களை ஆற்றும்படி அரசுக்கு சட்டப்படியான ஓர் ஆணையை பிறப்பிக்கவும் வேண்டும். அப்போது மட்டுமே, தனிப்பட்ட குடிமக்களின் ரகசியம் காக்கப் படுவது பற்றி பல்வேறு நீதிமன்றங்களின் பாராட்டுதல் களுக்கு எல்லா விதமான மதிப்பீடுகளும், அர்த்தமும் இருக்கும்.
நன்றி: 'தி இந்து' 1-11-2021
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment