மோடி ஆட்சியில் விவசாயிகளோடு வணிகர்களும் அதிகம் பேர் தற்கொலை : அதிர்ச்சித் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

மோடி ஆட்சியில் விவசாயிகளோடு வணிகர்களும் அதிகம் பேர் தற்கொலை : அதிர்ச்சித் தகவல்

புதுடில்லி, நவ. 4- 2020ஆம் ஆண்டில் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத் தரவுகள் தெரிவிக்கின்றன.  2020இல் விவசாயிகள் தற்கொலை 18% ஆக அதிகரித்துள்ள நிலையில், அதைவிட அதிகமாக வியாபாரி கள் தற்கொலை செய்துகொண்டுள்ள அவ லம் நிகழ்ந்துள்ளதுஇது அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் பலியானவர்கள், தற்கொலை மற்றும் குற் றங்கள் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டு வரு கிறது. அதன்படி, தற்போது வெளியாகி உள்ள 2020ஆம் ஆண்டுக்கான தரவு களில்,  கடந்த ஆண்டு (2020)  நாடு முழுவ தும் விபத்தில் 3,74,397 லட்சம்  பேர் உயிரி ழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

கரோனா தொற்றால் உலகப் பொருளா தாரமே நிலைகுலைந்த நிலையில், இந்தியா விலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இதனால்  வேலையின்மை காரணமாக பலர் தற்கொலை முடிவுகளை நாடிய நிலை யில், ஏராளமான தொழில் நிறுவனங்களும் நசுங்கின. அதுபோல ஏராளமான வியாபாரி களும், விவசாயிகளும் தற்கொலை செய்து உள்ளதாக தேசிய குற்ற ஆவணத்தின் தரவு களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது நாடு கரோனா நெருக்கடியில் இருந்து மீண்டும் வரும் நிலையில்,  2020 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 11,716 இந்திய தொழிலதிபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், இது  விவசாயிகளின் தற்கொலையை விட அதிகம் என்று தெரிவித்து உள்ளது.கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது, விவசாயிகளை விட வணிகர்கள் அதிகம்பேர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு விவசாயிகள் 11,379 பேர் தற்கொலை செய்திருந்த நிலை யில், வணிகர்கள் 8,573 பேராக இருந்தது. அதுவே 2017ஆம் ஆண்டு 7,778 ஆக உயர்ந்த நிலையில், 2018ஆம் ஆண்டு 7990 ஆக அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு விவசாயிகள் 10,281 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில், வணிகர்கள் 9,052 ஆக இருந்தாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு கரோனா பொதுமுடக்கம் சூழல் காரணமாக வணிகர் கள் உயிரிழப்பு விவசாயிகளை விட அதி கரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு 10,677 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள நிலையில், 11,716 தொழிலதிபர்கள் தற்கொலை முடிவை நாடியுள்ளனர். விவசாயிகளின் தற்கொலையும் 18% அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment