“அர்ஜக் சங்” நடத்திய சுயமரியாதைத் திருமணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

“அர்ஜக் சங்” நடத்திய சுயமரியாதைத் திருமணம்

 உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள பிபரி என்ற பஞ்சாயத்தின் கீழ்வரும் கல்யான் மண்டபம் நகரில் வசிக்கும்  அனுபம் சிங் கின் மகன் அஸ்வினி குமார் சிங் மற்றும் சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டம் மகோவா என்ற பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் படேலின் மகள் அங்கிதா படேல் இணையேற்புவிழா வாரணாசி வட்காவ் பகுதியில் எந்த ஒரு மூடச்சடங்குகளும் இன்றி சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது,

 சுயமரியாதைத் திருமண உறுதி மொழியை உத்தரப்பிரதேசம்அர்ஜக் சங்தலைவர் சந்திரவளி படேல் வாசிக்க மணமகன்  - மணமகள் இணையேற்பு உறுதியேற்றனர். இந்த திருமணத்திற்கு வாரணாசிஅர்ஜக் சங்தலைவர் தேவநாத் வர்மா தலைமையேற்றார்.

 உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில்அர்ஜக் சங்மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு போன்றவற்றோடு கவுதமபுத்தர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சாகுமகராஜ், மகாத்மா புலே உள்ளிட்ட சமூகநீதிக்காக வாழ்வை அர்பணித்த தலைவர்களின் பிறந்த  நாட்களை  வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றது, இந்த தலைவர்கள் குறித்த கருத்தரங்கம் போன்றவற்றை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

அதே போல் சுயமரியாதைத் திருமணமும் நடத்தி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment