முல்லைப் பெரியாறு அணை: அ.தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் சென்றதுண்டா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

முல்லைப் பெரியாறு அணை: அ.தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் சென்றதுண்டா?

 மதுரையில்  அமைச்சர் துரைமுருகன் கேள்வி

மதுரை,நவ.5- முல்லைப்பெரியாறு அணை தொடர் பாக போராட்டத்தை இப்போது அறிவித்துள்ள அதிமுக பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் சென்று பார்த் தாரா? என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக செல்கிறார். மதுரை யில் இன்று (5.11.2021) விமான நிலையத்தில் செய்தியா ளர்கள் அமைச்சர் துரைமுருகனிடம் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருக்கிறதே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், முல்லைப் பெரியாறு அணையை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றார். அதிமுகவினரின் போராட்ட அறிவிப்பு குறித்து கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் முல்லைப்  பெரியாறு அணையை எப்போதாவது நேரில் சென்று பார்த்தாரா? என்பதற்கு பதில் சொல்லிவிட்டு போராட்டம் நடத்தட்டும் என்றார்.

பேட்டியின் போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, அய்.பெரியசாமி, சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், தி.மு.. நிர்வாகிகள் இளைஞ ரணி ராஜா, வாடிப்பட்டி பால்பாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றியக்குழுத் தலைவர் வேட்டையன் உள்பட பலர் இருந்தனர்.

70 ஆண்டுகளை நிறைவு செய்த மத்திய ரயில்வே...

மும்பை, நவ.5 மத்திய ரயில்வே 70 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது.

மும்பையில் மின்சார ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக உள்ளது. இங்கு மத்திய, மேற்கு ரயில்வே சார்பில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கர்ஜத், கசாரா- சி.எஸ்.எம்.டி. இடையே தினந்தோறும் 1,500-க்கும் அதிகமான மின்சார ரயில்களை மத்திய ரயில்வே இயக்கி வருகிறது. இதில் மட்டும் சுமார் 40 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர்.

மத்திய ரயில்வே கடந்த 1951-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி அமைக்கப்பட்டது ஆகும். எனவே நேற்று மத்திய ரயில்வே தனது 70-ஆவது ஆண்டை நிறைவு செய்து உள்ளது.

இந்தியாவின் முதல் ரயில் மும்பை - தானே இடையே உள்ள மத்திய ரயில்வே வழித்தடத்தில் கடந்த 1853-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய ரயில்வே 1,575 கி.மீ. பரந்து விரிந்து உள்ளது. இங்கு இருந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மும்பை, புஷாவல், நாக்பூர், சோலாப்பூர், புனே ஆகிய 5 கோட்டங்களை கொண்ட மத்திய ரயில்வேயில் 471 ரயில் நிலையங்கள் உள்ளன. மேலும் மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் வரையும் விரிந்து உள்ளது.

 புதிதாக 12,729 பேருக்கு

கரோனா தொற்று பாதிப்பு

புதுடில்லி,நவ.5- ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,729 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (4.11.2021) அதிகபட்சமாக கேரளாவில் 7,545, மராட்டிய மாநிலத்தில் 1,141 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 33 லட்சத்து 754 ஆக உயர்ந்தது. கரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 136 பேர் உள்பட மேலும் 221 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,59,873 ஆக அதிகரித் துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து மேலும்12,165 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந் தோர் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 959 ஆக உயர்ந்தது. தற்போது 1,48,922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று 5,65,276 டோஸ்களும், இதுவரை 107 கோடியே 70 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. நேற்று நாடு முழுவதும் பரிசோதனை 6,70,847 ஆக குறைந்தது. இதுவரை 61.30 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

No comments:

Post a Comment