கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

திருவனந்தபுரம் நவ. 5  கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் 2 நாள்  வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால், அங்கு பேருந்து சேவை முடங்கி உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும் நிறுத் தப்பட்டு உள்ளன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு உள்ளது.

ஊதிய  உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரளா அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று (14.11.2021) நள்ளிரவு முதல்  2நாள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர். இந்த  வேலை நிறுத்தத்தால், பேருந்துகள் சேவை நடைபெறாமல் முடங்கி உள்ளது. இதனால்  கேரள மக்கள் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.

அதே வேளையில் தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. 

சென்னை, கோவை மற்றும் நாகர்கோவில், தேனி உள்பட பகுதிகளில் இருந்து கேரளா செல்லும் தமிழ் நாடுஅரசின் பேருந்துகளும் நிறுத்தப்பட் டுள்ளன.

இதனால் தமிழ்நாட்டில் இருந்து தொழில் நிமித்த மாக மற்றும் வேலை களுக்காக செல்லும் தமிழர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment