ஆரணி,நவ.5-ஆரணி அருகே கடும் மழை காரணமாக சுடுகாட்டுப்பாதையில் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக் குள்ளாயினர். மேலும், இறந்த வர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாமல் கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட் டம் ஆரணியை அடுத்துள்ள ஆவணியாபுரம் ஊராட்சிக் குட்பட்ட மதுரா சஞ்சீவி ராயபுரம் கிராமத்தில் சுடுகாட் டுக்குச் செல்லும் பாதையில், தொடர் கனமழை காரணமாக. 6 அடிக்கு மேல் ஆற்றுநீர் நிரம்பி வழிந்தோடுகிறது. இத னால் இறந்தவரின் உடல்களை எடுத்துச் செல்ல முடியாமல் உடலை சுமந்து செல்லும் பாடையை கயிறு கட்டி இழுத் துச் செல்லும் அவல நிலைக்கு கிராம மக்கள் ஆளாகியுள்ளனர். சுமந்து சென்றவர்கள் கழுத் தளவு தண்ணீரில் சுடுகாட்டுக்கு சென்றனர். இதையடுத்து இந்த கிராம மக்கள், சுடுகாட்டிற்குச் செல்ல பாலம் கட்டித்தருமாறு மாவட்ட நிர்வாகத்திடமும், அரசிடமும் கோரிக்கை வைத் துள்ளனர்.
No comments:
Post a Comment