லக்னோ, நவ. 2 உத்தரப் பிர தேச சட்டமன்ற தேர்த லில் ராஷ்டிரிய லோக் தளத்துடன் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சட்டமன்ற தேர்த லில் போட்டியிடமாட் டேன் என்று தெரிவித் துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கூட்டணி அமைப்பது குறித்து கட்சிகள் தீவிர மாக ஆலோசித்து வரு கின்றன. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (1.11.2021) செய்தி யாளர்களிடம் அவர் கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தளத்துடன் சமாஜ் வாடி கட்சி கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொகுதி பங் கீடுகளும் முடிவடைந்து விட்டது. ஆனால் சட்ட மன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவ தில்லை. சிவ்பால் ராஜின் சமாஜ்வாடி லோகியா கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதில் எனக்கு எந்த பிரச்சினை யும் இல்லை. அவருக்கும், அவரது ஆதரவாளர்க ளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும்’ என்றார்.
No comments:
Post a Comment