ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·   கல்வி வேலைவாய்ப்பில் சமூக பிரதி நிதித்துவம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·  காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.

 டைம்ஸ் ஆப் இந்தியா:

·  திருப்பதியில் வரும் 14ஆம் தேதி நடக்கும் தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அடுத்த திருச்சானூர் அருகே தனியார் விடுதியில் வரும் 14ஆம் தேதி தென்மாநில 29ஆவது கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன், தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின், பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கருநாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கேரள  முதலமைச்சர் பினராய் விஜயன், அந்தமான் நிக்கோபர் லட்சத்தீவு ஆளுநர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

 - குடந்தை கருணா

No comments:

Post a Comment