வெலிங்டன்,நவ.29- நியூசி லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப் பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று (28.11.2021) அதிகாலை ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலை விலேயே மருத்துவமனை இருப் பதால் அவர் தனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவ மனைக்கு புறப்பட்டார்.
பிரசவ வலியுடனேயே அவர் மிதிவண்டியை ஓட்டி மருத்துவ மனை போய் சேர்ந்தார். அங்கு சென்ற 10 நிமிடத்திலேயே அவ ருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போது நலமாக உள்ளனர்.
இதனிடையே பிரசவ வலி யோடு மிதிவண்டியில் மருத்துவ மனைக்கு சென்று குழந்தை பெற் றெடுத்தது குறித்து ஜூலி, முக நூலில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் “முக்கியமான செய்தி! இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வர வேற்றுள்ளோம். பிரசவத்தின்போது மிதிவண்டியை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்து விட்டது. ஆச்சரியப்படும் விதமாக இப்போது எங்களிடம் நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை உள்ளது. அவளின் தந் தையைப் போலவே” என குறிப் பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியே றிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment