தென்னாப்பிரிக்க எழுத்தாளரின் நாவலுக்கு புக்கர் பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

தென்னாப்பிரிக்க எழுத்தாளரின் நாவலுக்கு புக்கர் பரிசு

லண்டன், நவ.6  இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில், புக்கர் பரிசுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த ஆங்கில படைப்புகளுக்கு, புக்கர் பரிசாக, அய்ந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பரிசு, 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

புக்கர் பரிசு 2021க்கு, 158க்கும் அதிகமான எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளை அனுப்பியிருந்தனர். இறுதிச் சுற்றுக்கு, தென்னாப்ரிக்காவை சேர்ந்த டாமன் கல்கட்டின், ‘தி பிராமிஸ்மற்றும் இலங்கையின் அனுக் அருட்பிரகாசம் எழுதிய பாசேஜ் நார்த்உட்பட ஆறு நாவல்கள் தேர்வாயின. இந்நிலையில், தி பிராமிஸ் நாவல், புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில், டாமன் கல்கட்டின் இரண்டு நாவல்கள், இறுதிச் சுற்று வரை முன்னேறியிருந்தன. மூன்றாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட அவரது நாவல், 2021ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.

No comments:

Post a Comment