ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

தனியார், அரசு மற்றும் தன்னாட்சி அரசு நிறுவனங் களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

வன்னியர் 10.5% இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் இடம் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என முன்னாள் நீதிபதி கருத்து.

டைம்ஸ் ஆப் இந்தியா:

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இழிவு படுத்தும் முயற்சிகளுக்காக முன்னாள் சிஏஜி வினோத் ராய், பாஜக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பேச்சு.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 1.3 லட்சம்  மாணவர்கள் கடந்த 5 மாதங்களில் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment