ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·  இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக பல தொகுதிகளில் தோல்வியடைந்ததை அடுத்து  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்துள்ளது என காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கருத்து.

·  மும்பை சரக்கு வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த கிருஷ்ணா முராரி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

தி இந்து:

·  நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் அஸ்வினி, பாலின பாகுபாடுகளுக்கு எதிராக குரல் எழுப்பியதை அடுத்து அக்கிராமத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் சென்று நல திட்ட உதவிகளை வழங்கினார். அஸ்வினிக்கு உணவு மறுக்கப்படவில்லை, மரியாதை மறுக்கப்பட்டது. அதை மீட்டெடுக்க அரசுக்கு இது ஒரு வாய்ப்பு என்று முதலமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

 - குடந்தை கருணா

No comments:

Post a Comment