பெங்களூரு,நவ.6- கருநாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரலில் கரோனா வைரஸ் தொற்றின் 2-ஆவது அலை காரணமாக மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை காலை 5 மணியுடன் தளர்த்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த குதிரை பந்தயம் நடத்துவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு குழுவின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பந்தயத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கருநாடகாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று (5.11.2021) 5 பேர் உயிரிழந்தனர். பெங் களூருவில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 157 ஆக இருப் பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மகாராட்டிராவில் தினசரி கரோனா பாதிப்பு 1000த்திற்கு கீழ் வந்தது
மும்பை, நவ. 6 மகாராட்டிட மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (5.11.2021) மட்டும் 802 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,57,149 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் ஒரேநாளில் நேற்று (5.11.2021) மேலும் 17 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,40,362 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் ஒரேநாளில் 886 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,16,101 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 14,959 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மகாராட்டிட மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment