பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்
சென்னை, டிச.30 ஏப்ரல், மே மாதத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கல்வித்துறையில் மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களு டன் பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 28.12.2021 அன்று சென் னையில் ஆலோசனை நடத்தி னார்.
முன்னதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
பாலியல் துன்புறுத்தல்கள், பழைய கட்டடங்கள் இடிப்பது போன்ற விஷயங்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் களிடம் இருந்து அறிக்கை பெற்றுள்ளோம். அந்த அறிக்கையின்படி ஆயிரத்து 600 பள்ளிகளில் பழைய கட்ட டங்கள் இருப்பது முதல்கட்டமாக கண்டறியப்பட்டு, இடிக்க உத்தர விடப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 14417 எண்ணை பள்ளி வளாகங் களில் அனைத்து இடங்களிலும் தெரியும்படி வைக்க அறிவுறுத்தி இருக்கிறோம். மாணவர் மனசு புகார் பெட்டியும் வைக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்து பள்ளி களிலும் நடைமுறைப்படுத்தப் பட்டு இருக்கிறதா என்று கண் காணிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கு ஜனவரி 3ஆவது வாரத் தில் முதல் திருப் புதல் தேர்வு நடத்தப்பட்டுவிடும். அது முடிந்த பிறகு, மார்ச் மாதத்தில் 2ஆவது திருப்புதல் தேர்வு நடத்தப் படும். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாதத் திலோ பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.
கல்வித்துறையில் பள்ளிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி தேவை என்று முதல்-அமைச் சரிடம் கேட்டு இருக்கிறோம். கண்டிப்பாக அவர் வழங்குவார். அதை வைத்து கட்டிடங்களை கட்டும் வேலைகளை செய்வோம். இந்த ஆண்டு இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தள்ளிவைக்கப்படுமா?
ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நிலையில், குழந்தைகளின் உடல் நிலைதான் எங்களுக்கு முக்கியம். வருகிற 3ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஏதாவது அறிவிப்பு வந்தால் மட் டுமே அனைத்து மாணவர் களுக்கு மான நேரடி வகுப்புகள் குறித்த அறிவிப்பு தள்ளி வைக்கப் படும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் நம் முடைய நோக்கம். அதுவரையில் இத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment