பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்

வல்லம், டிச.30  பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் சென்னை, டெல்பி டிவிஎஸ் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பிற்கான வளாக நேர்காணல் 24.12.2021 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் தொழிலக பயிலக இணைப்புத்திட்டத்தின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற நிறுவனங்களை அழைத்து இக்கல்லூரியின் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. 

இந்த 2021 - 2022ஆம் ஆண்டிற் கான  வளாக நேர்காணலில் பங்கு பெற்ற சென்னை, டெல்பி - டிவிஎஸ் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் மூன்றாமாண்டு மாணவர்கள் 40 பேரை தேர்ந்தெடுத்து பணி ஆணை களை வழங்கியது.

முன்னதாக 26.11.2021 அன்று கோயம்புத்தூர், சக்தி ஆட்டோ காம்பொனன்ட் லிமிடெட்  நிறுவனம்   நடத்திய  வளாக நேர்காணலில் இக்கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளின் மூன்றாமாண்டு மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளாக நேர்காணலில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரியின்  முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா பணி ஆணைகள் வழங்கி பாராட்டினார்.

No comments:

Post a Comment