'தந்தை பெரியாரின்' சிந்தனைகள்தான் தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆணிவேர்!
'தி டைம்ஸ் ஆப் இந்தியா'
ஆங்கில நாளேட்டில் கட்டுரை வெளியீடு
Salem Dharanidharan
|
R |
His fight to end caste
discrimination and for women empowerment made Tamil Nadu’s growth model unique
in the country. While states such as Kerala and Himachal Pradesh have done well
in socio-economic development, others like Maharashtra and Gujarat have done
exceptionally in terms of economic growth. Tamil Nadu, however, has been able
to achieve success in both socio-economic development and industrial growth,
with much lower index than that of Gujarat and Maharashtra.
Though states such as Bihar and
Uttar Pradesh have had caste mobilisations, they could not obtain the results
of horizontal mobilisation of the entire gamut of oppressed castes. It is
because of the inability to aggregate the subaltern groups to arrive at a
common consensus and fight for a common cause.
Renowned philosopher Ernesto
Laclau says the most difficult challenge of any movement, across the world, is
to unite the left-behind collective identities to aggregate themselves into one
popular entity and represent their collective consciousness.
One of the biggest achievements
of the Periyar and Dravidian movement was to unite all those left behind
horizontally under the common theme of dignity and provide them with the
aspiration to achieve more. If Periyar was a movement, then what the successive
Dravidian governments did was to implement laws and policies to realise the
broader vision of Periyar and the Dravidar Kazhagam. When Tamil Nadu, under M
Karunanidhi in 1989, passed the Hindu succession (Tamil Nadu Amendment) Act,
1989, giving women equal access to property as that of her male siblings, it
bestowed her with dignity and put her on an equal footing with her male
counterparts. Such interventions played a major role in women empowerment — TN
has one of the highest participations of women in the labour force at 30% in
comparison to the Indian average of 19%.
Another achievement was the
ability to bring about a paradigm shift in societal thought — a deviation from
one that accepted irrational existing social norms to one that questioned
societal irrationality. This is significant because mere passing of legislation
does not bring about intended results. A legislation is effective only when
there is a broader consensus within society for it. That is the reason why the
Congress government that was in power in Tamil Nadu until 1967 implemented
policies in a limited sense, in conformity to the Dravidian ethos — such as
extending the mid-day meal scheme introduced by the Justice Party and founding
of state-level PSUs. Such policies were not pursued by the Congress government
in other states.
Increased aspiration led to
education for people belonging to different social strata (TN has a gross
enrolment ratio of 51%, while the pan-India average is 29%).
Democratisation of bureaucracy
along with demand for services from people, was one of the reasons that helped
in alignment of bureaucracy with the interests of the public. This is one of
the important differentiating factors that could explain the success of the
mid-day meal scheme or ‘Amma’ kitchens in Tamil Nadu and failure of such similar
schemes in some poorer states. Though the scourge of caste still exists, the
state has made significant progress. And in this season of political
polarisation and hate, Periyar’s legacy brings hope — if all countrymen could
unite under the theme of dignity and social justice.
(The
writer is the executive coordinator of the Dravidian Professionals Forum)
The
Times of India, Chennai
FRIDAY, DECEMBER 24, 2021
தமிழாக்கம்
சமூகத்தில் சமத்துவம் தழைத்தோங்க போராடிய புரட்சியாளராகவும், சீர்திருத்தவாதியாகவும் விளங்கியவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி. அவர் மறைந்து 48 ஆண்டுகள் கடந்த பின்பும் தமிழ்நாட்டின் சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இன்றுவரை அவருடைய கொள்கைகளே அடிப்படையாக விளங்குகின்றன.
ஜாதிப் பாகுபாட்டிற்கு முடிவு கட்டவும், பெண்களின் அதிகாரத்துவம் உயரவும் பெரியார் நிகழ்த்திய போராட்டங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சி நம் நாட்டிற்கே ஓர் இணையற்ற முன்னுதாரணம் என்றே கூறலாம். கேரளம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் சமூக, பொருளாதார வளர்ச்சி நன்றாகவே உள்ளன. மகாராட்டிரம், குஜராத் போன்ற இதர மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. ஆனால் தமிழ்நாடு சமூக, பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி தொழில்வளப் பெருக்கத்திலும் வெற்றியடைந்துள்ளது. குறியீட்டைப் பொறுத்த வரையில் குஜராத், மகாராட்டிரா மாநிலங்களை காட்டிலும் மிகவும் குறைவான நிலைதான் எனினும் சிறப்பான வளர்ச்சி எனலாம்.
பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஜாதிவாரியாக மக்களை அணிதிரட்டியுள்ளன. எனினும் இடைமட்ட அணிதிரட்டலில் அவை வெற்றியடையவில்லை. ஒடுக்கப்பட்ட உட்பிரிவு மக்களை, துணைக்குழுக்களில் உள்ள ஜாதியினரை ஒருங்கிணைக்க அந்த மாநிலங்களால் இயலவில்லை. பொதுவான எந்த ஒரு நோக்கத்திற்காகவும் இந்த ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஒரே தளத்தில் ஒன்றுபட்டுப் போராட முன்வருவதில்லை. அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளால் மாநிலங்களின் முழுமையான வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றி ணைத்துப் போராட வைப்பதே உலகின் பல இயக்கங் களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்கிறார் புகழ்பெற்ற தத்துவமேதையும் அறிஞருமான எர்னெஸ்டோ லாக்லா (Ernesto Laclau) என்பவர்.
பெரியாரும் - திராவிட இயக்கமும் இந்த விஷயத்தில் அடைந்துள்ள வெற்றி அபாரமானது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கடைமட்ட அளவில் ஓர் அணியினராகத் திரட்டி ஒன்றிணைத்தது மிகப்பெரிய சாதனை. எந்த ஒரு நோக்கத்திற்காகவும் ஒன்றுபட்டு அவர்கள் குரல்கொடுப்பதாலும் போராடுவதாலும் முழு வெற்றி சாத்தியமாகிறது. சுயமரியாதை என்ற பொதுவான உணர்வுரிமையால் உந்தப்பட்டு மேலும் அதிகமாக சாதிக்க எல்லோரும் முனைவது எளிதாகிறது.
பெரியாரே ஓர் இயக்கமாகத் திகழ்ந்தார். தொடர்ந்து ஆட்சிபுரிந்த திராவிடக் கட்சிகள் தலைமையிலான அரசுகள் பெரியாரின் கொள்கைகளையும், திராவிடர் கழகத்தின் நிலைப்பாடுகளையும் கடைப்பிடித்தே செயலாற்றி வந்துள்ளன. பெரியாரின் சிந்தனைகளுக்கு அவை செயல்வடிவம் தந்தன. சட்டமியற்றியும், திட்டங்கள் தீட்டியும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளன.
1989 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் முயற்சியால் பெண் களுக்கு சொத்துரிமை சட்டரீதியாக கிடைத்தது. ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்கு கிடைத்தது. பெண்களின் அதிகார பலம் அதிகரிக்க இத்தகைய சட்டத்திருத்தங்களும் துணை புரிந்தன. சராசரியாக 19 சதவிகித பெண்கள் நம் நாட்டில் பணிபுரிபவர்களாக உள்ளனர். தமிழ்நாட் டிலோ இது 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
பகுத்தறிவுக்குப் புறம்பான கோட்பாடுகளையும் காலாவதியான சிந்தனைகளையும் அறவே புறக்கணித்து வாழும் துணிச்சலை மக்களிடம் ஏற்படுத்தியது தமிழ்நாட்டின் மற்றொரு சாதனை. மடைமைகளையும் பகுத்தறிவற்ற கருத்துகளையும் எதிர்த்து மக்களை குரலெழுப்பவைத்த சாதனை அது. சட்டங்களை இயற்றுவதால் மட்டும் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து விடுவதில்லை. மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஒருங்கிணைந்து அவற்றை கடைப்பிடித்து வாழ்வதும் தான் முக்கியம்.
1967 ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசுகள் முந்தைய ஆட்சியாளர்களைப் பின்பற்றியே பல சட்டங்களை செயல்படுத்திவந்தன. நீதிக் கட்சி அறிமுகப்படுத்திய இலவச மதிய உணவு திட்டத்தை காங்கிரஸ் அரசுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தின. மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் உருவானதும் அப்படித்தான். காங்கிரஸ் ஆட்சி நிலவிய மற்ற மாநிலங்களில் இத்தகைய திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை.
பல்வேறு சமூகத்தினருக்கும் பிரிவினருக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்கச் செய்ததும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாதனை. கல்வியில் ஆர்வம் மக்களிடையே தமிழ்நாட்டில் அதிகரித்ததற்கும் திராவிடர் இயக்கக் கோட்பாடுகளும் பெரியார் சிந்தனைகளும் வழிவகுத்தன. தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக் கல்வியில் சேருவோர் விகிதம் 51 விழுக்காடாக உயர்ந்து நிற்கிறது. அனைத்திந்திய விகிதம் 29 விழுக்காடு அளவிலேதான் உள்ளது!
மக்களின் தேவையறிந்து புதிய பல பொது நலத்திட்டங்கள் தீட்டுவதில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. அவற்றை சரிவர நடைமுறைப்படுத்தியும் வருகிறது. உதாரணமாக பள்ளிகளில் மதிய உணவு திட்டம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நிர்வாகக் குறைபாடுகளால் இத்தகைய திட்டங்கள் மற்ற மாநிலங்களில் வெற்றிபெறவில்லை. ஜாதிபாகுபாட்டுப் பிரச்சினை தமிழ்நாட்டில் ஓரளவு நீடித்தாலும் இருந்தாலும் மாநிலத்தின் முன்னேற்றமும் வளர்ச்சியும் சிறப்பாகவே உள்ளன. மக்களிடையே பொதுவாக நிலவும் ஒருங்கிணைப்பு பொதுநல திட்டங்கள் தடையின்றி நடக்க வழிவகுக்கிறது. சமூகநீதி உணர்வுடனும் சுயமரியாதையுடனும் நாட்டுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால் பல பிரச்சினைகள் தீரும் என்று நம்பலாம். பெரியாரின் சிந்தனைகளும் கொள்கைகளும் அவர் விட்டுச் சென்ற சொத்தாகவே உள்ளன. அரசியல் சார்ந்த குழப்பங்களும் ஒருவருக்கொருவர் வெறுப்பும் நிலவும் இத்தருணத்தில் அவர் வகுத்துவிட்டுச் சென்ற பாதையும் அவருடைய சிந்தனைகளும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் - நாட்டு மக்கள் அனைவரும் கண்ணியம் காத்து சமூக நீதிப் பாதையில் ஒன்றிணைந்தால் வெற்றிக்கான நம்பிக்கை பெருகும். மனித சமத்துவம் மலரும்.
நன்றி: ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 24.12.2021
தமிழாக்கம்: எம்.ஆர். மனோகர்
No comments:
Post a Comment